இனிப்பகம் உரிமத்தை ரத்து செய்த உணவு பாதுகாப்பு துறைக்கு அபராதம்

இனிப்பகம் உரிமத்தை ரத்து செய்த உணவு பாதுகாப்பு துறைக்கு அபராதம்
Updated on
1 min read

மும்பை: கடந்த மே மாதம் மகா​ராஷ்டிர உணவு பாது​காப்​புத் துறை​யின் ஆணை​ய​ராக துக்​கா​ராம் முண்டே நியமிக்​கப்​பட்​டார். அவர் பொறுப்​பேற்​றது முதல் தின​மும் நூற்​றுக்​கும் மேற்​பட்ட இடங்​களில் உணவு பாதுகாப்புத் துறை அதி​காரி​கள் ஆய்வு நடத்தி வரு​கின்​றனர்.

அவரது உத்​தர​வின்​படி கடந்த ஜூன் மாதம் புனே​வில் உள்ள குருநானக் டைரி, ஸ்வீட்ஸ் என்ற இனிப்​பகத்​தில் சோதனை நடத்தப்பட்​டது. அங்கு சுகா​தா​ரமற்ற முறை​யில் இனிப்பு வகைகள் தயாரிக்​கப்​படு​வது கண்​டு​பிடிக்​கப்​பட்​ட​தால் இனிப்​பகத்​தின் உரிமம் ரத்து செய்​யப்​பட்​டது. இதை எதிர்த்து மும்பை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது.

இந்த வழக்கை விசா​ரித்த தலைமை நீதிபதி ரவீந்​திர குகே, நீதிபதி கவுதம் அன்​காட் பிறப்​பித்த உத்​தர​வில் கூறியதாவது: ஆணை​யர் துக்​கா​ராமின் செயல்​பாடு​களை பாராட்​டு​கிறோம். ஆனால் சில நேரங்​களில் நீங்​கள் எல்லை மீறி செயல்​படு​வ​தாக கருதுகிறோம். புனே நகர் இனிப்​பகத்​தில் 98 சதவீத தவறுகள் களை​யப்​பட்டு உள்​ளன.

அதன் பிறகும் அந்த இனிப்​பகத்​துக்கு உரிமம் வழங்கப்படவில்லை. இதற்​காக உணவு பாது​காப்​புத் துறைக்கு ரூ.5 லட்​சம் அபராதம் விதிக்​கப்​படு​கிறது. இத்​தொகை​யைப் பாதிக்​கப்​பட்ட இனிப்​பகத்​துக்கு இழப்​பீ​டாக வழங்க வேண்​டும். இவ்​வாறு நீதிப​தி​கள்​ உத்​தர​வில் கூறியுள்ளனர்.

இனிப்பகம் உரிமத்தை ரத்து செய்த உணவு பாதுகாப்பு துறைக்கு அபராதம்
3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: தமிழகம் தலையிடக் கூடாது - டி.கே.சிவகுமார் கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in