நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் கட்ட பணி இன்று தொடக்கம்

நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் கட்ட பணி இன்று தொடக்கம்
Updated on
1 min read

புதுடெல்லி: நாடு முழு​வதும் மக்​கள் தொகை கணக்​கெடுப்​பின் முதல்​கட்ட பணி இன்று தொடங்​கு​கிறது.

பத்து ஆண்​டு​களுக்கு ஒரு​முறை மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடத்​தப்​படு​கிறது. கடந்த 2011-ம் ஆண்​டில் நாடு தழு​விய அளவில் மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது. இதன் ​பிறகு 2021ல் கணக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டிருக்க வேண்​டும். ஆனால் கரோனா பெருந்​தொற்று காரண​மாக கணக்​கெடுப்பு பணி தள்ளிவைக்​கப்​பட்​டது.

இந்த சூழலில் நாடு முழு​வதும் இரு கட்​டங்​களாக மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடத்​தப்​படும் என்று மத்​திய அரசு கடந்த ஆண்டு அறி​வித்​தது. இதன்​படி நாடு முழு​வதும் மக்​கள் தொகை கணக்​கெடுப்​பின் முதல் கட்ட பணி இன்று தொடங்​கு​கிறது. இதற்​காக 33 கேள்வி​கள் அடங்​கிய பட்​டியல் வெளி​யிடப்​பட்டு உள்​ளது.

வீட்​டின் உரிமை​யாளர் யார் ? வீட்​டில் எவ்​வளவு அறை​கள் உள்​ளன ? எத்​தனை இரு சக்​கர, 4 சக்கர வாக​னங்​கள் உள்​ளன ? எவ்​வளவு தொலைக்​காட்சி பெட்​டிகள், கணினிகள், மடிக்​கணினிகள் உள்ளன என்பன உள்​ளிட்ட கேள்வி​கள் இடம் பெற்​றுள்​ளன.

இந்த 33 கேள்வி​களுக்​கான விவரங்​களை பொது​மக்​கள் அளிக்க வேண்​டும். மேலும் இந்​திய பதிவுத் துறை மற்​றும் மக்​கள் தொகை கணக்​கெடுப்பு ஆணை​யர் அலு​வல​கம் சார்​பில் சிறப்பு இணை​ய தளம் தொடங்​கப்​பட்டு உள்​ளது. இந்த இணை​யம் வாயி​லாக பொது​மக்​கள் தாங்​களாகவே சுய​ விவரங்​களைப் பதிவு செய்யலாம். செப்​டம்​பர் 30ம் தேதி வரை முதல்​கட்ட பணி​கள் நடை​பெற உள்​ளன.

தமிழகத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ள​தால் ஜூலை 17ம் தேதி மக்​கள் தொகை கணக்​கெடுப்பு முதல் கட்ட பணி தொடங்​கு​கிறது. இதன்​படி பொது​மக்​கள் தங்​களது சுய​ விவரங்​களை ஜூலை 31ம் தேதி வரை இணை​யத்​தில் பதிவிடலாம். ஆகஸ்ட் 1 முதல் 30ம் தேதி அரசு அலு​வலர்​கள் வீடு வீடாக வந்து கணக்​கெடுப்பு பணி​யில் ஈடு​படு​வார்​கள் என்று தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது. முதல்​கட்ட பணி​கள் நிறைவு பெற்ற பிறகு 2027 பிப்​ர​வரி​யில் மக்​கள் தொகை கணக்​கெடுப்​பின் 2ம் கட்ட பணி​கள் தொடங்​கப்​படும்.

நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் கட்ட பணி இன்று தொடக்கம்
சுந்தர்.சி என்ட்ரி... பிடிஆருக்கு டஃப்? - மதுரை மத்திய தொகுதி களம் எப்படி?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in