

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் பலோத்ரா மாவட்டம் பச்பத்ரா என்ற இடத்தில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (எச்பிசிஎல்), ராஜஸ்தான் அரசின் கூட்டு முயற்சியால் ரூ.43,129 கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை கட்டப்பட்டுள்ளது.
இந்த ஆலை பிரதமர் நரேந்திர மோடியால் இன்று திறந்து வைக்கப்பட இருந்தது. இந்நிலையில் இந்த ஆலையின் சிடியு பிரிவில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதியில் வானில் கரும் புகைமூட்டம் உருவானது. இந்த தீ விபத்தில் உயிர்ச் சேதங்கள் குறித்த தகவல் எதுவும் இல்லை.