ஆந்​தி​ரா​வில் கரை திரும்​பாத 6 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்​சம் நிதி​யுதவி

ஆந்​தி​ரா​வில் கரை திரும்​பாத 6 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்​சம் நிதி​யுதவி
Updated on
1 min read

வி​சாகப்​பட்​டினம்: ஆந்​தி​ர மாநிலம் விசாகப்​பட்​டினம் சேப்​பலரேவு பகுதியைச் சேர்ந்த 7 மீனவர்​கள் அண்​மை​யில் வங்கக்கடலில் மீன் பிடிக்க படகில் சென்​றனர். ஆனால் அவர்​கள் திட்டமிட்​டபடி கரை திரும்​ப​வில்​லை.

இதையடுத்து குடும்​பத்​தினர் அளித்த தகவலின்​படி அவர்​களை தேடும் பணி நடை​பெற்​றது. இதில் கடலோர ரோந்​துப் படையினரும் ஹெலி​காப்​டர் உதவி​யுடன் 72 மணி நேர​மாக தொடர்ந்து தேடினர். எனினும் அவர்​களை கண்​டு​பிடிக்க முடியவில்​லை.

இந்​நிலை​யில் அந்த 7 மீனவர்​களில் காரி சின்னா மட்​டும் உயிர் தப்பி கரை திரும்​பி​னார். மற்​றவர்​கள் கடலில் மூழ்கி இறந்து விட்ட​தாக அவர் தெரி​வித்​தார். இதையடுத்து அவர்​களின் உடல்களை தேடும் பணி தொடங்​கியது. எனினும் அவை கிடைக்கவில்​லை.

இதற்​கிடை​யில் இந்த விவ​காரத்​தில் ஆந்​திர அரசு நியமித்த 3 உறுப்​பினர் குழு விசா​ரணை நடத்​தி​யது. இக்​குழு 6 மீனவர்​களும் கடலில் மூழ்கி இறந்​திருக்​கலாம் என அரசுக்கு அறிக்கை அளித்தது. இதன் அடிப்​படை​யில் மீன்​வளத்​துறை அமைச்​சர் கே.ரவீந்​திரா நேற்று 6 மீனவர்​களின் குடும்​பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

ஆந்​தி​ரா​வில் கரை திரும்​பாத 6 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்​சம் நிதி​யுதவி
போதைக்கு அடிமை​யான 10,656 பேரை மீட்ட பஞ்​சாப் அரசு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in