திரிணமூல் எம்.பி.அபிஷேக் பானர்ஜி மீது காவல் துறையில் புகார்

திரிணமூல் எம்.பி.அபிஷேக் பானர்ஜி

திரிணமூல் எம்.பி.அபிஷேக் பானர்ஜி

Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் டைமண்ட் ஹார்பர் தொகுதி மக்களவை உறுப்பினரும் திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) தலைவர் மம்தாவின் சகோதரர் மகனுமான அபிஷேக் பானர்ஜி மீது பவானிபூர் காவல் நிலையத்தில் அர்னாப் காந்தி தாஸ் என்பவர் புகார் அளித்துள்ளார்.

அதில், “அபிஷேக் பானர்ஜி மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் மே 2-ம் தேதி சமூக ஊடகத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அது மிகவும் பொறுப்பற்றது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது. இப்புகாரின் பேரில் முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகக் கொல்கத்தா மாநகர மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, பிதான்நகர் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் அபிஷேக் மீது ஏற்கெனவே எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருந்தது.

<div class="paragraphs"><p><em>திரிணமூல் எம்.பி.அபிஷேக் பானர்ஜி</em></p></div>
பக்ரீத் பண்டிகையில் ராஜஸ்தான் முஸ்லிம்களின் வித்தியாசமான முயற்சி: பசுவை தேசிய விலங்காக அறிவிக்கக் கோரி தேசிய அளவில் கையெழுத்து இயக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in