லஞ்சம் வாங்கிய ஐஆர்எஸ் பெண் அதிகாரி கைது: ரூ.1.6 கோடி ரொக்கம், தங்கம், வெள்ளி பறிமுதல்

லஞ்சம் வாங்கிய ஐஆர்எஸ் பெண் அதிகாரி கைது: ரூ.1.6 கோடி ரொக்கம், தங்கம், வெள்ளி பறிமுதல்
Updated on
1 min read

லக்னோ: தொழில​திபரிடம் லஞ்​சம் வாங்​கிய இந்திய வரு​வாய் பணி (ஐஆர்​எஸ்) பெண் அதி​காரி பிரபா பண்​டாரி கைது செய்​யப்​பட்​டார். அவரது வீட்​டில் இருந்து ரூ.1.6 கோடி ரொக்​கம் பறி​முதல் செய்​யப்​பட்​டது. ஏராள​மான தங்க, வெள்ளி நகைகள், பல கோடி மதிப்​புள்ள சொத்து ஆவணங்​களும் கைப்​பற்​றப்​பட்டு உள்​ளன.

உத்தர பிரதேசம், ஜான்​சி​யில் ஜிஎஸ்டி அலு​வல​கம் செயல்​படு​கிறது. அங்கு துணை ஆணை​ய​ராக (ஐஆர்​எஸ் அதி​காரி) பிரபா பண்​டாரி பணி​யாற்றி வந்​தார். கடந்த 18-ம் தேதி அவரது தலை​மையி​லான ஜிஎஸ்டி அதி​காரி​கள், ஜான்சி நகரில் செயல்​படும் ஜெய் அம்பே பிளைவுட்​ஸ், ஜெய் துர்கா ஹார்ட்​வேர் நிறு​வனங்​களில் ஆய்வு செய்​தனர். அப்​போது இரு நிறு​வனங்​களி​லும் பல கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்​யப்​பட்​டிருப்​பது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது.

சட்ட நடவடிக்​கை​களில் இருந்து தப்​பிக்க அந்த நிறு​வனங்​களின் உரிமை​யாளர்​கள் லோகேஷ், ராஜு மங்​தானி ஆகியோர் லஞ்​சம் கொடுக்க முன்​வந்​தனர். இரு​வரும் ஜான்சி ஜிஎஸ்டி அலு​வலக கண்​காணிப்​பாளர் அனில் குமாரை அவரது வீட்​டில் சந்​தித்து பேசினர். அப்​போது ரூ.1.5 கோடி லஞ்​சம் கொடுக்க பேரம் பேசப்​பட்​டது.

இதுதொடர்​பான ரகசிய தகவல் சிபிஐ அதி​காரி​களுக்கு கிடைத்​தது. அவர்​கள் ஜான்​சி​யில் முகாமிட்டு ஜிஎஸ்டி அலு​வலக அதி​காரி​களின் நடவடிக்​கைகளை உன்​னிப்​பாகக் கண்​காணித்​தனர்.

கடந்த 30-ம் தேதி வழக்​கறிஞர் நரேஷ் குப்தா என்​பவர், ஜிஎஸ்டி கண்​காணிப்​பாளர் அனில் குமார், மற்​றொரு மூத்த அதி​காரி அஜய் சர்​மாவை சந்​தித்து ரூ.70 லட்​சம் லஞ்ச பணத்தை வழங்​கி​னார். அங்கு மறைந்​திருந்த சிபிஐ அதி​காரி​கள், 3 பேரை​யும் கைது செய்​தனர்.

மொபைல் போன் அழைப்பு: சிபிஐ அதி​காரி​களின் உத்​தர​வின்​பேரில் ஜிஎஸ்டி கண்​காணிப்​பாளர் அனில்​கு​மார், துணை ஆணை​யர் பிரபா பண்​டாரி​யிடம் மொபைல் போனில் பேசி​னார்.

“முதல்​கட்​ட​மாக ரூ.70 லட்​சம் வந்​து​விட்​டது” என்று அனில்​கு​மார் கூற, எதிர்​முனை​யில் பேசிய பிரபா பண்​டாரி, “வெரி​குட், அந்த பணத்தை தங்​க​மாக மாற்றி என்​னிடம் கொடுங்​கள்” என்று உத்​தர​விட்​டார். இந்த மொபைல்​போன் அழைப்​பால், லஞ்ச கும்​பலின் தலை​வி​யாக அவர் செயல்​பட்​டிருப்​பது உறுதி செய்​யப்​பட்​டது.

டெல்​லி​யில் உள்ள சொகுசு வீட்​டில் பிரபா பண்​டாரி தங்​கி​யிருந்​தார். உடனடி​யாக டெல்லி விரைந்த சிபிஐ அதி​காரி​கள் அவரை கைது செய்​தனர். அவரது வீட்​டில் சிபிஐ அதி​காரி​கள் தீவிர சோதனை நடத்​தினர். அப்​போது ரூ.1.6 கோடி ரொக்​கம் பறி​முதல் செய்​யப்​பட்​டது.

மேலும் ஏராள​மான தங்க நகைகள், வெள்ளி கட்​டிகள், பல கோடி மதிப்​புள்ள சொத்து ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்​டன. இதே​போல ஜிஎஸ்டி அதி​காரி​கள் அனில் குமார், அஜய் சர்மா ஆகியோ​ரும் ஏராள​மான சொத்​துகளை வாங்கி குவித்​திருப்​பது கண்​டு​பிடிக்​கப்​பட்டு உள்​ளது.

லஞ்சம் வாங்கிய ஐஆர்எஸ் பெண் அதிகாரி கைது: ரூ.1.6 கோடி ரொக்கம், தங்கம், வெள்ளி பறிமுதல்
ரூ.41,863 கோடி முதலீட்​டில் 22 மின்னணு உதிரி​பாக உற்​பத்தி திட்டத்துக்கு ஒப்​புதல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in