சிறுபான்மையின நிறுவனங்களை பாதிக்கும் எப்சிஆர்ஏ-வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: கத்தோலிக்க யூனியன் வலியுறுத்தல்

சிறுபான்மையின நிறுவனங்களை பாதிக்கும் எப்சிஆர்ஏ-வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: கத்தோலிக்க யூனியன் வலியுறுத்தல்
Updated on
1 min read

குவாஹாட்டி: வெளிநாட்டு நிதி நடைமுறையை கடுமையாக்க வெளிநாட்டு நிதி திருத்த மசோதாவை மத்திய அரசு மக்களவையில் கடந்த மாதம் 25-ம் தேதி அறிமுகம் செய்தது.

இதுகுறித்து அகில இந்திய கத்தோலிக்க யூனியன் விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த மசோதாவில் வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்ட உரிமங்கள் ரத்து செய்யப்படும் அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் சிறுபான்மை நிறுவனங்களின் சொத்துகளை கட்டுப்படுத்த அல்லது அவற்றை அகற்ற அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கும் பிரிவுகள் கவலையளிப்பதாக உள்ளன. இது போன்ற சட்டப்பிரிவுகள் தவறான முன்மாதிரியை ஏற்படுத்தும் மற்றும் நிர்வாக ரீதியான வரம்பு மீறலுக்கு வழிவகுக்கும்.

இந்த நடவடிக்கை, அரசியலமைப்பு ரீதியாகப் பாதுகாக்கப்பட்ட உரிமைகளுக்குள் நேரடியாக ஊடுருவுவது போன்றது. இந்த திருத்தங்கள், மதச் சுதந்திரத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டப் பிரிவுகளுக்கு முரணாக இருக்கலாம். எனவே, இந்த மசோதாவை மத்திய அரசு முழுமையாக மறு பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறுப்பட்டுள்ளது.

சிறுபான்மையின நிறுவனங்களை பாதிக்கும் எப்சிஆர்ஏ-வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: கத்தோலிக்க யூனியன் வலியுறுத்தல்
பிகானிர் புஜியா, அப்பளம் ஏற்றுமதி பாதிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in