ஒடிசாவில் ரூ.1 லட்சத்துக்கு குழந்தையை விற்ற தந்தை

ஒடிசாவில் ரூ.1 லட்சத்துக்கு குழந்தையை விற்ற தந்தை
Updated on
1 min read

பாலசோர்: ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பரி​சாஹி கிராமத்​தைச் சேர்ந்த ராகேஷ் குமார் பெஹரா என்ற கொத்தனார், தனது இரண்​டரை வயது ஆண் குழந்​தையை விற்க ஒரு நபருடன் பேரம் பேசும் வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலானது. இது குறித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை​யைத் தொடங்​கினர்.

பின்னர் தீவிர தேடு​தல் வேட்​டை​யில், சிமினிபதி பகு​தி​யில் இருந்து குழந்தை மீட்​கப்பட்டு காப்பகத்தில் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ள​தாக மாவட்ட துணை காவல் கண்​காணிப்​பாளர் பிரமோத் குமார் மல்​லிக் தெரி​வித்​துள்​ளார். ரூ.1 லட்​சத்​துக்கு விலை பேசிய ராகேஷ், ரூ.50,000 முன்​பண​ம் பெற்​றது தெரிய ​வந்​துள்​ளது.

இதுகுறித்து ராகேஷ் கூறும்​போது, "எனக்கு நான்கு குழந்​தைகள் உள்​ளனர். அவர்​களை வளர்க்க மிக​வும் சிரம​மாக இருந்​தது. வறுமை காரண​மாகவே இந்த முடிவை எடுத்​தேன். தெரிந்த நபர் ஒரு​வர் மூலம் ஒரு​வரைத் தொடர்பு கொண்டு குழந்​தையை ஒப்படைத்​தேன்" என்​றார்.

காவல்துறை தரப்​பில் கூறும்​போது, "ராகேஷ் இரண்டு திரு​மணம் செய்​துள்​ளார். தற்​போது விற்​கப்​பட்ட குழந்தை அவரது இரண்டாவது மனை​விக்​குப் பிறந்​தது என தெரிய​வந்​துள்​ளது. கருத்து வேறு​பாடு காரண​மாக அந்​தக் குழந்​தை​யின் தாய் ராகேஷை விட்​டுப் பிரிந்து தனி​யாக வசித்​து வரு​கிறார்" என்​றனர்​.

ஒடிசாவில் ரூ.1 லட்சத்துக்கு குழந்தையை விற்ற தந்தை
தனி சின்னம் கேட்கிறது ஐஜேகே

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in