

தே.ஜ.கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய ஜனநாயகக் கட்சி (ஐஜேகே) தனிசின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து உள்ளது.
“2011-ல் மோதிர சின்னத்திலும், 2016-ல் கத்திரிகோல் சின்னத்திலும், 2021-ல் ஆட்டோ சின்னத்திலும் போட்டியிட்டோம். தற்போது தனி சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளோம். விரைவில் தனி சின்னம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்று அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, இந்திய ஜனநாயகக் கட்சியின் வெற்றி மாநாடு பொதுக்கூட்டம் திருக்கோவிலூர், லால்குடி, விருத்தாசலம், குன்னம் ஆகிய 4 இடங்களில் இம்மாத இறுதியில் தொடங்கி அடுத்த மாதம் வரை நடைபெறவுள்ளது.
6 தொகுதிகளில் போட்டியிட விரும்பும் ஐஜேகே கடந்த 8-ம் தேதி கடலூர் மாவட்டம் வேப்பூரில் மாநாடு நடத்தியது. இந்த மாநாட்டின் வெற்றியைத் தொடர்ந்து 4 இடங்களில் வெற்றி மாநாடு பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் திமுக அரசின் தோல்விகளை மக்களிடம் கொண்டு செல்வோம் என்றும் ஐஜேகே நிர்வாகிகள் கூறினர்.