‘அப்பா, உங்கள் கனவை நான் முழுமையாக நனவாக்குவேன்...’ - ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் ராகுல் காந்தி நெகிழ்ச்சிப் பதிவு

‘அப்பா, உங்கள் கனவை நான் முழுமையாக நனவாக்குவேன்...’ - ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் ராகுல் காந்தி நெகிழ்ச்சிப் பதிவு
Updated on
1 min read

புதுடெல்லி: ​முன்​னாள் பிரதமர் ராஜீவ் காந்​தி​யின் 35-வது நினைவு தினத்​தையொட்​டி, மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி, தனது சிறு​வயதுப் புகைப்​படம் ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து உருக்​க​மாக அஞ்​சலி செலுத்​தி​யுள்​ளார்.

வலிமை​யான மற்​றும் வளமான இந்​தி​யாவை உரு​வாக்க வேண்டும் என்ற தனது தந்​தை​யின் தொலைநோக்​குப் பார்வையை நிறைவேற்​றத் தொடர்ந்து பாடு​படப் போவ​தாக​வும் அவர் உறு​தி​யளித்​துள்​ளார்.

இது தொடர்​பாக ராகுல் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “அப்​பா, நீங்​கள் கண்ட கனவின் ​படி, திறமை​யான, வளமான மற்​றும் வலிமையான இந்​தி​யாவை உரு​வாக்​கு​வதற்​கான பொறுப்பை நான் முழு​மை​யாக ஏற்​றுக்​கொள்​வேன். உங்​களது போதனைகளும், நெறிகள், நினை​வு​களும் என்​னுடன் இருக்​கும்” என்று தெரி​வித்​துள்​ளார்.

தலைநகர் டெல்​லி​யில் உள்ள ராஜீவ் காந்​தி​யின் நினை​விட​மான ‘வீர் பூமி’​யில் காங்​கிரஸ் மூத்த தலை​வர்​கள் சோனியா காந்​தி, மல்​லி​கார்​ஜுன கார்​கே, பிரி​யங்கா காந்தி வதேரா உள்​ளிட்​டோர் மலர் தூவி மரி​யாதை செலுத்​தினர். இந்​நிகழ்​வின் போது பிரியங்கா காந்​தி​யின் பிள்​ளை​களான மிராயா மற்​றும் ரெய்ஹான் வதே​ரா​வும் உடனிருந்​தனர்.

காங்​கிரஸ் தலை​வர் கார்​கே, ராஜீவ் காந்​தியை ‘இந்​தி​யா​வின் தலைசிறந்த புதல்​வர்’ என்று போற்​றியதோடு, நவீன இந்​தி​யாவை வடிவ​மைக்க அடித்​தளமிட்​டவை என்று தெரி​வித்​துள்​ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகை​யில், “இந்​தியா ஒரு தொன்மையான நாடு, அதே வேளை​யில் இளமை​யான தேசம். வலிமை​யான, சுதந்​திர​மான, சுய​சார்​புடைய, உலக நாடு​களின் வரிசை​யில் முதன்​மை​யான மற்​றும் மனிதகுலத்​திற்​குச் சேவை செய்​யும் ஒரு இந்​தி​யா​வையே நான் கனவு காண்​கிறேன்” என்ற ராஜீவ் காந்தியின் வரலாற்​றுச் சிறப்​புமிக்க வரி​களை இங்கு நினைவு கூர்கிறேன்.

மேலும், அவரது தியாக திரு​நாளில், நாட்​டின் கோடிக் ​கணக்​கான மக்​களிடையே நம்​பிக்​கை​யை​யும் லட்​சி​யத்​தை​யும் விதைத்த இந்தி​யா​வின் சிறந்த புதல்​வ​ரான பாரத ரத்னா ராஜீவ் காந்​திக்கு நமது நெஞ்​சார்ந்த அஞ்​சலியைச் செலுத்​துகிறோம்" என்​றும்​ கார்கே தெரி​வித்​துள்​ளார்​.

‘அப்பா, உங்கள் கனவை நான் முழுமையாக நனவாக்குவேன்...’ - ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் ராகுல் காந்தி நெகிழ்ச்சிப் பதிவு
இந்தியா ‘ஏ’ அணியில் அனுகுல் ராய் சேர்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in