

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடியேறியுள்ள பண்டிட்கள் ஜனவரி 19-ம் தேதியை இனப்படுகொலை நாளாக அனுசரிக்கின்றனர்.
அந்த வகையில் 36-வது இனப்படுகொலை தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதுகுறித்து தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா நேற்று கூறும்போது, “காஷ்மீரில் இருந்து வெளியேறிய பண்டிட்கள் எப்போது வேண்டுமானாலும் (காஷ்மீருக்கு) திரும்பலாம். அவர்களை யாரும் தடுக்கவில்லை. இது அவர்களின் வீடு, எனவே அவர்கள் திரும்பி வர வேண்டும்.
எனினும், இடம் பெயர்ந்த பண்டிட்கள் குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றை அங்கேயே அமைந்துள்ளன. இந்நிலையில் அவர்கள் மீண்டும் இங்கு வர விரும்புவார்களா என்பது சந்தேகமாக உள்ளது" என்றார்.