பஞ்சாபில் நீர்ப்பாசன மோட்டார்களை காப்பாற்ற திருடர்களுக்கு பணம் அனுப்ப தயாரான விவசாயிகள்

பஞ்சாபில் நீர்ப்பாசன மோட்டார்களை காப்பாற்ற திருடர்களுக்கு பணம் அனுப்ப தயாரான விவசாயிகள்
Updated on
1 min read

சண்டிகர்: பஞ்​சாப் மாநிலம் ஃபரித்​கோட் மாவட்​டம் பாகி கலான் கிராமத்​தில், 3 மாதங்​களுக்கு முன்பு ஒரே இரவில் விவ​சா​யிகளின் நிலங்​களில் இருந்து கிட்​டத்​தட்ட 15 நீர்ப்​பாசன மோட்​டார்​கள் திருடு போயின.

இதுகுறித்து போலீ​ஸாருக்​குத் தகவல் கொடுத்​தும் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்​லை. சமீபத்​தில், மீண்​டும் சுமார் 25 மோட்​டார்​கள் திருடப்​பட்​ட​தால் நிலைமை மேலும் மோசமடைந்​துள்​ளது. இது விவ​சா​யிகளை அதிர்ச்​சி​யிலும், தவிப்​பிலும் ஆழ்த்​தி​யுள்​ளது. இந்​நிலை​யில் விவ​சா​யிகள் ஒரு விசித்​திர​மான, விரக்​தி​யான முடிவை எடுத்​துள்​ளனர்.

கிராமம் முழு​வதும் ஒரு போஸ்​டர் ஒட்டி உள்​ளனர். அதில், மோட்​டார்​களைத் திருடு​வதை நிறுத்​தி​விட்​டு, டிஜிட்​டல் பேமென்ட் ஸ்கேனர் (க்யூ ஆர் கோடு) மூலம் பணம் பெற்​றுக் கொள்​ளு​மாறு திருடர்​களுக்கு வேண்​டு​கோள் விடுத்​துள்​ளனர்.

தற்​போது சமூக வலை​தளங்​களில் வைரலாகி வரும் அந்த போஸ்​டரில், குறுவை (நெல்) சாகுபடி சீசன் தொடங்​கி​யுள்​ள​தால், விவ​சா​யத்​துக்கு மோட்​டார்​கள் அவசி​யம் தேவைப்​படு​வ​தாகக் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. திருட்​டி​னால் நஷ்டத்தை சந்​திப்​ப​தற்​குப் பதிலாக, தங்​களு​டைய உபகரணங்​களைத் தொடா​மல் இருந்​தால், திருடர்​களுக்கு நேரடி​யாகவே பணம் செலுத்​தத் தயா​ராக இருப்​ப​தாக விவ​சா​யிகள் தெரி​வித்​துள்​ளனர்.

மேலும், மாநிலம் முழு​வதும் இது​போன்ற சம்​பவங்​களைத் தடுக்​கத்​ தவறி​விட்​ட​தாக பஞ்​​சாப்​ அரசு மீதும்​ விவ​சா​யிகள்​ குற்​றம்​ ​சாட்​டி​யுள்​ளனர்​.

பஞ்சாபில் நீர்ப்பாசன மோட்டார்களை காப்பாற்ற திருடர்களுக்கு பணம் அனுப்ப தயாரான விவசாயிகள்
சென்னையில் கோஒர்க்ஸ் விரிவாக்கம்: 3,900 இடங்களுடன் 6 புதிய மையங்கள் திறப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in