

பிரதிநித்துவப் படம்
சென்னை: நாட்டின் முன்னணி அலுவலகப் பணியிட வசதி வழங்குநரான கோஒர்க்ஸ், சென்னை நகரில் 6 புதிய மையங்களை திறந்துள்ளது.
புரூக்ஃபீல்ட் பிராப்பர்டீஸ் ஆதரவுடன் செயல்படும் இந்நிறுவனத்தின் இந்த விரிவாக்கம், சென்னை நகரை முக்கிய வளர்ச்சி சந்தையாகக் கருதும் அதன் நீண்டகால வணிக உத்தியின் ஒரு பகுதியாகும்.
இந்த புதிய மையங்கள் மூலம் 2.9 லட்சம் சதுர அடி பரப்பளவு மற்றும் 3,900-க்கும் மேற்பட்ட பணியிட மேசைகள் புதிதாக சேர்க்கப்படுகின்றன.
இதன்மூலம் சென்னை நகரில் கோஒர்க்ஸ் மையங்கள் எண்ணிக்கை 10 ஆகவும், மொத்த பரப்பளவு சுமார் 5 லட்சம் சதுர அடியாகவும், பணியிட மேஜைகள் எண்ணிக்கை 6,800 ஆகவும் அதிகரித்துள்ளது.
பெருங்குடி, ஜிஎஸ்டி சாலை மற்றும் ரேடியல் ரோடு–பள்ளிக்கரணை உள்ளிட்ட முக்கிய வணிக மையங்களில் அமைந்துள்ள இந்த வளாகங்கள், நெகிழ்வான பணியிடங்கள் மற்றும் நிர்வகிக்கப்பட்ட அலுவலகத் தீர்வுகளை ஒருங்கிணைத்து நிறுவனங்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.