ம​கா​ராஷ்டி​ரா​வில் கிணற்றில் கார் விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு

ம​கா​ராஷ்டி​ரா​வில் கிணற்றில் கார் விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

மும்பை: ம​கா​ராஷ்டி​ரா​வின் நாசிக் மாவட்​டத்​தில் சாலை​யோரக் கிணற்​றில் கார் விழுந்த விபத்​தில் 6 குழந்​தைகள் உட்பட ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 9 பேர் உயி​ரிழந்​தனர்.

மகா​ராஷ்டி​ரா​வின் நாசிக் மாவட்​டம், திண்​டோரி நகரில் உள்ள தனி​யார் பயிற்சி நிறு​வனம் ஒன்​றில் நேற்று முன்​தினம் மாலை ஆண்டு விழா நடை​பெற்​றது. இந்த விழா​வில் அதே பகு​தி​யின் இந்​தூர் கிராமத்தை சேர்ந்த சுனில் தத்​தாத்​ரேய தர்​கோடே என்​பவர் தனது குடும்​பத்​தினருடன் கலந்து கொண்​டார். இரவு விழா முடிந்த பிறகு இவர்​கள் தங்​கள் காரில் சொந்த ஊருக்​குப் புறப்​பட்​டனர். காரை சுனில் தர்​கோடே ஓட்​டி​னார்.

இந்​நிலை​யில் திண்​டோரி தாலு​கா, சிவாஜி நகர் பகு​தி​யில் இரவு 11.30 மணி​யள​வில் கார் கட்​டுப்​பாட்டை இழந்து சாலை​யோரம் இருந்த கிணற்​றில் விழுந்​தது.

தகவல் அறிந்த போலீ​ஸார் மற்​றும் தீயணைப்​புப் படை​யினர் அங்கு விரைந்​தனர். பிறகு தேசி​யப் பேரிடர் மீட்​புப் படை​யினரும் அங்கு வந்து சேர்ந்​தனர். கிணற்​றில் கணிச​மான அளவு தண்​ணீர் இருந்​த​தால், அதனுள் மூழ்​கி​யிருந்த காரை வெளியே எடுப்​பது மிக​வும் சவாலான பணி​யாக இருந்​தது. சுமார் 2 மணி நேர போராட்​டத்​துக்​குப் பிறகு கிரேன் உதவி​யுடன் கிணற்​றில் இருந்து கார் வெளியே எடுக்​கப்​பட்​டது. அதிலிருந்த 9 பேரும் மருத்​து​வ​மனைக்​குச் கொண்டு செல்​லப்​பட்​டனர். ஆனால் அவர்​கள் அனை​வரும் ஏற்​கெனவே இறந்​து​விட்​ட​தாக மருத்​து​வர்​கள் அறி​வித்​தனர்.

அவர்​கள் அனை​வரும் ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்​தவர்​கள். விபத்​தில் இறந்​தவர்​களுக்கு மகா​ராஷ்டிர முதல்​வர் தேவேந்​திர பட்​னா​விஸ் ஆழ்ந்த இரங்​கல் தெரி​வித்​தார். இறந்​தவர்​களின் வாரிசு​தா​ரர்​களுக்கு அரசு சார்​பில் ரூ.5 லட்​சம் நிதி​யுதவி வழங்​கப்​படும் என அறி​வித்​தார். மேலும் இந்த சம்​பவம் குறித்து விரி​வான விசா​ரணை நடத்த மாவட்ட நிர்​வாகத்​துக்கு உத்​தர​விட்​டார். சாலைக்கு அரு​கில் உள்ள கிணற்றை மூட அதி​காரி​கள் நடவடிக்கை எடுக்​காததே விபத்​துக்கு காரணம்​ என மாநில அமைச்​சர்​ கிரிஷ் மகாஜன்​ கூறி​னார்​.

ம​கா​ராஷ்டி​ரா​வில் கிணற்றில் கார் விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு
28 மாவட்டங்களுடன் ஆந்திர மாநிலத்தின் புதிய வரைபடம் வெளியீடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in