ஆந்திரா முதல் ராஜஸ்தான் வரை தேடியும் சிக்காத கும்பல்: போலி இணையதளம் உருவாக்கி வாகன ஓட்டிகளிடம் மோசடி

ஆந்திரா முதல் ராஜஸ்தான் வரை தேடியும் சிக்காத கும்பல்: போலி இணையதளம் உருவாக்கி வாகன ஓட்டிகளிடம் மோசடி
Updated on: 
1 min read

சென்னை: போக்​கு​வரத்து விதி​மீறலுக்​காக வாகன ஓட்​டிகளுக்கு விதிக்​கப்​படும் அபராதத்தை ஆன்​லைனில் செலுத்​து​வ​தாக கூறி, போலி இணை​யதளங்​கள் மூலம் மோசடி நடை​பெறு​வது கண்​டறியப்​பட்​டுள்​ளது.

போக்​கு​வரத்து விதி​மீறல்​களுக்​கான அபராதம் ‘இ-சலான்’ மூலம் ஆன்​லைனில் வசூலிக்​கப்​பட்டு வரு​கிறது. இதில் மோசடி கும்​பல்​கள் கைவரிசை காட்டி வரு​கின்​றன. ‘இ-சலான்’ பட்​டியலை இணை​யதளத்​தில் இருந்து திருடும் இவர்​கள், சம்​பந்​தப்​பட்ட வாகன ஓட்​டிகளை தொலைபேசி, வாட்​ஸ்அப், குறுஞ்​செய்தி மூலம் தொடர்பு கொண்டு, ‘உங்​கள் வாக​னத்​துக்கு விதிக்​கப்​பட்​டுள்ள அபராதத்தை ஆன்​லைனில் செலுத்தி விடு​கிறோம். அதற்​காக சிறிய தொகையை கமிஷனாக கொடுத்​தால் போதும்’ என்று ஆசை வார்த்தை கூறுகின்​றனர். இதை நம்பி வாகன ஓட்​டிகள் செலுத்​தும் பணத்தை சுருட்டி விடு​கின்​றனர். இதற்​காக அரசு இணை​யதளம், கட்​டண ரசீது போல போலி இணை​யதளம், ரசீதுகளை​யும் உரு​வாக்கி வாகன ஓட்​டிகளை ஏமாற்​றுகின்​றனர்.

இது​தொடர்​பாக புகார்​கள் எழுந்​ததைத் தொடர்ந்து, சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ் உத்​தர​வின்​படி, போக்​கு​வரத்து கூடுதல் காவல் ஆணை​யர் சாமுண்​டீஸ்வரி மேற்​பார்​வை​யில், இணை ஆணை​யர் பகல​வன் தலை​மையி​லான போக்​கு​வரத்து போலீ​ஸார் விசா​ரணை​யில் இறங்​கினர். சம்​பந்​தப்​பட்ட இணை​யதளங்​களில் குறிப்​பிட்​டிருந்த முகவரி​களின் அடிப்​படை​யில் ஆந்​திரா, டெல்லி, ஹரியானா, ராஜஸ்​தான், தெலங்​கானா உள்​ளிட்ட பல்​வேறு மாநிலங்​களுக்​குச் சென்று விசா​ரணை நடத்​தினர். ஆனால், அவை போலி முகவரி​கள் என தெரிய​வந்​தது.

இதையடுத்து, இந்த இணை​யதளங்​களின் பின்​னணி​யில் உள்ளவர்​களை அடை​யாளம் காண, சைபர் குற்​றப்​பி​ரி​வில் சென்னை போக்​கு​வரத்து போலீ​ஸார் புகார் அளித்​துள்​ளனர். இதன்​படி, சைபர் குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர்.

மத்​திய அரசின் அதி​காரப்​பூர்வ இணை​யதளத்​தில் (echallan.parivahan.gov.in) மற்​றும் அங்​கீகரிக்​கப்​பட்ட தபால் நிலை​யங்​கள், இ-சேவை மையங்​கள் மூலமாக மட்​டுமே அபராதத்தை செலுத்த வேண்​டும். போலி இணை​யதளங்​கள்

மூலம் பணத்தை இழந்​தால் உடனடி​யாக 1930 என்ற தேசிய சைபர் குற்ற உதவி எண்​ணைத் தொடர்​பு​கொண்டு புகார் அளிக்க வேண்​டும். இணை​யதளத்​திலும் (www.cybercrime.gov.in) புகார் அளிக்​கலாம் என்று போலீ​ஸார் அறி​வுறுத்​தி​யுள்​ளனர்.

X