பிரதமர் மோடி பங்​கேற்ற விழாவுக்கு அருகில் வெடிபொருள்​ பறி​முதல்

 வெடிபொருள்​ பறிமுதல் செய்யப்பட்ட இடம்

வெடிபொருள்​ பறிமுதல் செய்யப்பட்ட இடம்

Updated on
1 min read

பெங்​களூரு​: பெங்​களூரு​வில் உள்ள வாழும் கலை அமைப்​பின் 45-வது ஆண்டு விழா​வில் பிரதமர் மோடி நேற்று பங்​கேற்​றார். இந்த விழா நடை​பெற்ற இடத்​தில் இருந்து 3 கி.மீ. தொலை​வில் வெடிபொருட்​கள் கைப்​பற்​றப்​பட்​டன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து கர்​நாடக போலீ​ஸார் கூறிய​தாவது: பிரதமர் நரேந்​திர மோடி​யின் வரு​கையை ஒட்டி வழக்​க​மான சோதனை​கள் நடைபெற்​றன. அப்​போது வாழும் கலை அமைப்பு ஆசிரமத்​தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலை​வில் 2 ஜெலட்​டின் குச்​சிகள் கண்டுபிடிக்கப்பட்​டன. இவை நடை​பாதை​யில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த வெடிபொருட்​களை கொண்டு வந்​தது யார் என்​பது குறித்து சிசிடிவி கேம​ராக்​கள் மூலம் ஆய்வு செய்து வரு​கிறோம். தலைநகர் டெல்​லி​யில் தீவிர​வாத தாக்​குதல் நடத்த சதித் திட்​டம் தீட்​டி​யிருப்​ப​தாக உளவுத் துறை ஏற்​கெனவே எச்​சரிக்கை விடுத்துள்​ளது. இதன்​பேரில் டெல்லி முழு​வதும் பலத்த பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டு உள்​ளன. பெங்​களூரு​விலும் தீவிர சோதனை​ நடத்தி வரு​கிறோம்.

பிரதமர் நரேந்​திர மோடி​யின் வரு​கை​யின்​போது வெடி பொருட்கள் கைப்​பற்​றப்​பட்டு இருப்​பது பல்​வேறு சந்​தேகங்​களை எழுப்​பு​கிறது. இதுதொடர்​பாக தீவிர வி​சா​ரணை நடத்​தப்​பட்​டு வரு​கிறது. இவ்​வாறு கர்​நாடக போலீஸார்​ தெரி​வித்​தனர்​.

<div class="paragraphs"><p><em> வெடிபொருள்​ பறிமுதல் செய்யப்பட்ட இடம்</em></p></div>
Ammu: காயங்களை கூர்தீட்டி ஆயுதம் செய்த அம்மு | திரை தேவதைகள் 16

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in