ஏழுமலையானுக்கு சேவை செய்வது எனது பாக்கியம்: தேவஸ்தான நிர்வாக அதிகாரி பெருமிதம்

திருப்​ப​தி​ தேவஸ்​தான நிர்வாக அதி​காரி எம்.ரவிசந்திரா

திருப்​ப​தி​ தேவஸ்​தான நிர்வாக அதி​காரி எம்.ரவிசந்திரா

Updated on
1 min read

திருப்பதி: திருப்​ப​தி​யில் உள்ள தேவஸ்​தான நிர்​வாக அலுவலகத்தில் நிர்​வாக அதி​காரி எம்.ரவிசந்​திரா தலை​மை​யில் தேசிய சிவில் சேவை​கள் தினம் நேற்று கொண்​டாடப்​பட்​டது.

இதில் ரவிசந்​திரா பேசி​ய​தாவது: ஏழுமலையானுக்கு சேவை செய்வது எனது பாக்கியம். பக்​தர்​களுக்கு உண்​மை​யான அன்பு மூலம் செய்​யும் சேவையே உன்​னத​மானது. தேசிய சிவில் சேவைகள் தினம் என்​பது ஐஏஎஸ் அதி​காரி​களுக்கு மட்​டுமே சம்​பந்​தப்​பட்​ட​தில்​லை. சேவை செய்​யும் ஒவ்​வொரு​வருக்​கும் இது பொருந்​தும். மக்​கள் - அரசு இடையே அரசு பணி​யாளர்​கள் ஒரு சேவகர்​களாக, பால​மாக பணி​யாற்​றிட வேண்​டும்.

நாம் அனை​வரும் ஓய்வு பெறும் வரை அர்ப்​பணிப்​போடு பணியாற்ற வேண்​டும். அரசு நிபந்​தனை​களுக்கு உட்​பட்​டு, சட்டங்​களை மீறாமல் பணி செய்​திட வேண்​டும் என்​பது எனது வேண்​டு​கோள். அதே​போல், அனை​வருக்​கும் புரி​யும் மொழி​யில் நாம் பேசி​னால்​தான் விஷய​மும் விரை​வாக விளங்​கும். முடிந்த அளவிற்கு தெலுங்​கில் பேச பழகுங்​கள். இவ்​வாறு ரவிசந்​திரா கூறினார்.

இந்​நிகழ்ச்​சி​யில், இணை நிர்​வாக அதி​காரி​கள் வீர பிரம்​மம், டாக்டர் ஏ.சரத், தலைமை பாது​காப்பு அதி​காரி முரளி கிருஷ்ணா உள்ளிட்டோர்​ பங்​கேற்​றனர்​.

<div class="paragraphs"><p><em>திருப்​ப​தி​ தேவஸ்​தான நிர்வாக அதி​காரி எம்.ரவிசந்திரா</em></p></div>
பாகிஸ்தான் உளவாளி ஷாசாத் பாட்டி உத்தரவின் பேரில் டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட இருவர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in