பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரின் விவசாய வருமானத்துக்கு விலக்கு - மத்திய அரசு திட்டம்

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

Updated on: 
1 min read

புதுடெல்லி: பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு (ஈடபுள்யூஎஸ்) விதிகளில் விவசாய வருமானத்துக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஈடபுள்யுஎஸ் இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.

உயர் சமூகத்தினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாயப்பில் 10 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் கடந்த ஜனவரி 2019 இல் அமலானது. இதற்கான வருமான உச்ச வரம்பு ஆண்டுக்கு ரூ.8 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒபிசி, எஸ்சி, எஸ்டி ஒதுக்கீடுகளுக்கு வெளியே உள்ளவர்கள் இதன்மூலம் பலன் பெறுகின்றனர்.

விவசாய வருமானம் காரணமாக, உயர் சமூகத்தைச் சேர்ந்த பலர் இட ஒதுக்கீட்டின் பலன்களைப் பெற முடிவதில்லை என புகார் எழுந்ததை அடுத்து, இது குறித்து ஆய்வுசெய்த பல்கலைகழக மானியக் குழு, விவசாய வருமானத்தில் இருந்து விலக்கு அளிக்கும் யோசனையை அறிக்கை ஒன்றின்மூலம் மத்திய அரசுக்கு அளித்தது.

இதன் அடிப்படையில், ‘ஐந்து ஏக்கருக்கும் குறைவான விவசாய நிலம் வைத்திருத்தல்' ஆகிய நிபந்தனையை நீக்க அரசு திட்டமிட்டுள்ளது. இவற்றில் விவசாயத்தில் கிடைக்கும் வருமானத்திற்கு விலக்கு அளிக்கத் திட்டமிடப்படுகிறது. இந்த சட்டதிருத்தத்தின் மூலம் விவசாயம் செய்யும் உயர் சமூகத்தினரும் பலன் பெறுவார்கள்.

உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளன. இந்த சூழலில், மத்திய அரசின் இந்த முயற்சி வாக்கு அரசியலில் பலன் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில், இந்த திருத்தம் மூலம், உயர்சமூகத்தினரில் மேலும் பலர் பலனடைவார்கள். இதன்மூலம் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியாகவே இந்த முடிவை மத்திய அரசு எடுக்க இருப்பதாகத் தெரிகிறது.

டெல்லி வட்டாரத்தில் வெளியாகும் தகவல்களின்படி, ‘இந்த திருத்தம் ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு முன்னதாக கொண்டுவரத் திட்டமிடப்படுகிறது.

இதை முழுமையாகச் செய்யாமல், இந்த ஐந்து ஏக்கர் என்பதை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகளும் உள்ளன. இம்மாற்றங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளின் நலனுக்கு எதிரானவர்கள் என்ற கருத்து உருவாகும் வாய்ப்புகள் உள்ளன.

ஈடபுள்யுஎஸ் ஒதுக்கீட்டால் தற்போது 18.2 சதவீத குடும்பங்கள் பலன்களைப் பெறுகிறார்கள். இவர்களது வருமானத்தில் விவசாயம், வணிகம், ஊதியம் மற்றும் தொழில்முறை வருமானம் உள்ளிட்ட அனைத்தும் சேர்த்து கணக்கிடப்படுகிறது.

இந்த ஒதுக்கீட்டைப் பெறும் விவசாயிகள், ஐந்து ஏக்கருக்கு குறைவாகவே நிலம் வைத்திருப்பவர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள். இதனால், இந்த மசோதாவிற்கு துவக்கத்திலேயே எதிர்ப்புகள் கிளம்பின.

இந்த நிலையில் சட்டதிருத்தத்திற்கும் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தால் அது நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு பரிந்துரைக்கப்படும் வாய்ப்புகளும் உள்ளன.

<div class="paragraphs"><p>பிரதமர் மோடி</p></div>
ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு முதல்வர் விஜய் வாழ்த்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in