‘ஜெகன் ஆட்சியில் அன்னபிரசாத பொருட்களிலும் தரம் இல்லை’

‘ஜெகன் ஆட்சியில் அன்னபிரசாத பொருட்களிலும் தரம் இல்லை’
Updated on
1 min read

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு நேற்று திருமலையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் லட்டு பிரசாதம் தயாரிப்பதற்கான நெய்யில் மட்டும் கலப்படம் நடக்கவில்லை, அன்னதானப் பொருட்கள் கூட தரமாக இருந்ததில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு லட்டு பிரசாதத்தின் தரம் மட்டுமல்ல, அன்னபிரசாதத்தின் தரமும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

பக்தர்களும் இதனை பல இடங்களில் பதிவு செய்து வருகின்றனர். ஆனால் தேவையில்லாமல் முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்ப பால் உற்பத்தி நிறுவனங்கள் மீது ஜெகன் கட்சியினர் வீண் புரளி கிளப்பி வருகின்றனர். அவர்களுக்கு நெய் எது, பாலாடை கட்டி எது என்று கூட தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

‘ஜெகன் ஆட்சியில் அன்னபிரசாத பொருட்களிலும் தரம் இல்லை’
தமிழக முதல்வருக்கு எதிரான தேர்தல் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in