பினராயி மகள் வீணாவுக்கு அமலாக்கத் துறை சம்மன்

பினராயி மகள் வீணா

பினராயி மகள் வீணா

Updated on
1 min read

கொச்சி: கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் டி.வீணாவுக்கு, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

கேரள முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் (சிபிஎம்) மூத்த தலைவருமான பினராயி விஜயனின் மகள் டி.வீணா தற்போது செயல்பாட்டில் இல்லாத வீணாவின் ஐடி நிறுவனமான ‘எக்ஸாலாஜிக்', சிஎம்ஆர்எல் நிறுவனத்துக்கு எந்தவொரு சேவையும் வழங்காமல், ஒப்பந்தம் என்ற பெயரில் ரூ.2.78 கோடி முறைகேடாகப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை விசாரணை நடத்த தடையில்லை என்று கேரள உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், வரும் வெள்ளிக்கிழமை கொச்சி அலுவ லகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு வீணாவுக்கு அமலாக் கத்துறை முதன்முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. இவருடன் சேர்த்து சிஎம்ஆர்எல் நிறுவனத் தலைவர் சசிதரன் கர்த்தா உட்பட 8 அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த மாதம் பினராயி விஜயன் மற்றும் வீணா உள்ளிட்டோரின் இல்லங்களில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, அவர் தொடர்புடைய 242 வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.18.36 கோடியை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. வீணா திறமையான பெண் என்பதால் இதனைச் சட்டப்பூர் வமாக எதிர்கொள்வார் என்றும், இதில் சிபிஐ(எம்) கட்சி தலை யிடாது என்றும் அதன் தலைவர் என்.என்.கிருஷ்ண தாஸ் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p><em>பினராயி மகள் வீணா</em></p></div>
தென்கிழக்கு ஆசிய சைபர் மோசடி முகாம்களுக்கு இந்திய இளைஞர்களை கடத்திய வழக்கில் இரு முக்கிய குற்றவாளிகள் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in