மே.வங்கத்தில் அரசு மருத்துவர்களுக்கு தேர்தல் பணி: நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என கண்டனம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

புதுடெல்லி: மேற்குவங்கத்தில் அரசு மருத்துவர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கு அரசு மருத்துவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து உள்ளனர்.

மேற்குவங்கத்தில் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மேற்கு வங்கத்தின் ஹுக்ளி மாவட்டம், அராம்பாக் நகரில் உள்ள அரசு மருத்துவமனையை சேர்ந்த 48 மருத்துவர்கள், வாக்குச்சாவடி தேர்தல் அதிகாரியாக பணியாற்ற கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அராம்பாக் அரசு மருத்துவமனை வட்டாரங்கள் கூறியதாவது: பொதுவாக அரசு மருத்துவர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்குவது கிடையாது. எதிர்பாராத திருப்பமாக எங்கள் மருத்துவமனையின் 48 மருத்துவர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் மருத்துவர்கள் தேர்தல் பணிக்குச் சென்றால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாக நேரிடும்.

தேர்தல் பணியில் இருந்து மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் முறைப்படி கோரிக்கை விடுக்கப்படும். இவ்வாறு அராம்பாக் அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.மருத்துவக் கல்லூரி முதல்வர் ராம பிரசாத் ராய் கூறும்போது, “இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் பேசினேன்.

மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று அவர் உறுதி அளித்திருக்கிறார்" என்று தெரிவித்தார்.கொல்கத்தா மருத்துவக் கல்லூரியின் அலுவலக ஊழியர்கள் 22 பேருக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கு அந்த மருத்துவக் கல்லூரி நிர்வாகம் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறது. வேறு சில மருத்துவக் கல்லூரிகளின் அலுவலக ஊழியர்களுக்கும் தேர்தல் பணி வழங்கப்பட்டு உள்ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
“ஈரான் கெஞ்சிக் கொண்டிருக்கிறது” - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in