பிஜு ஜனதா தள புகாரை விசாரிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

பிஜு ஜனதா தள புகாரை விசாரிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
Updated on
1 min read

புவனேஸ்வர்: ஒடிசாவில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கு 2-வது வாக்குச் சீட்டு வழங்கப்பட்டது குறித்து பிஜு ஜனதா தளம் கூறியுள்ள குற்றச்சாட்டை தலைமை தேர்தல் அதிகாரி விசாரிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஒடிசாவில் கடந்த மார்ச் 16-ம் தேதி மாநிலங்களவை எம்.பி.க்கள் தேர்தல் நடைபெற்றது. அப்போது பாஜக எம்எல்ஏ.க்கள் உபசானா மொஹபத்ரா மற்றும் பூர்ண சந்திர சேதி ஆகியோர் வாக்களித்தபின் அவர்களுக்கு 2-வது முறையாக வாக்குச் சீட்டு வழங்கப்பட்டது. இது குறித்து பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கேள்வி எழுப்பியது.

இந்த விவகாரம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையருக்கு பிஜு ஜனதா தளம் எம்.பி சஸ்மித் பத்ரா கடிதம் அனுப்பினார். இதையடுத்து 2-வது வாக்குச் சீட்டு வழங்கப்பட்டது தொடர்பாக பிஜேடி தெரிவித்துள்ள குற்றச்சாட்டை உடனடியாக விசாரிக்கும்படி ஒடிசா தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த விரைவான நடவடிக்கை, நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக பிஜு ஜனதா தளம் பாரட்டியுள்ளது.

பிஜு ஜனதா தள புகாரை விசாரிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
வெற்றி பெற்றதும் பனையூருக்கு வந்துவிடுங்கள்: தவெக வேட்பாளர்களுக்கு விஜய் திடீர் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in