ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை வழக்கு: நீதிமன்றத்தில் கூச்சலால் விசாரணை ஒத்திவைப்பு

மேற்கு வங்க மாநிலம்  ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் நேற்று மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது. இதில், மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி,  ஜுன் மாலியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: பிடிஐ

மேற்கு வங்க மாநிலம் ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் நேற்று மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது. இதில், மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ஜுன் மாலியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: பிடிஐ

Updated on
2 min read

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் ஐ-பேக் நிறு​வனத்​தில் அமலாக்​கத் துறை சோதனை நடத்​தி​யது தொடர்​பான வழக்கு கொல்​கத்தா உயர் நீதி​மன்​றத்​தில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது ஏற்​பட்ட கூச்​சல் குழப்​பத்​தால் கோபமடைந்த நீதிபதி வழக்கு விசா​ரணையை ஜனவரி 14-க்கு ஒத்​தி​வைத்து உத்​தர​விட்​டார்.

மேற்கு வங்க மாநிலத்​தில் விரை​வில் சட்​டப்​பேர​வைக்​கான தேர்​தல் நடை​பெறவுள்ள நிலை​யில், திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் அரசி​யல் வியூக வகுப்பு நிறு​வன​மாக ஐ-பேக் செயல்​பட்டு வரு​கிறது. இந்த நிறு​வனத்​தில் அண்​மை​யில் அமலாக்​கத் துறை சோதனை நடத்​தி​யது.

இந்த சோதனை​யின்​போது கைப்​பற்​றப்​பட்ட ஆவணங்​கள் மற்​றும் தரவு​களை தவறாகப் பயன்​படுத்​து​வதற்​கும், பரப்​புவதற்​கும் தடை விதிக்​க​வும், திருப்​பித் தரக் கோரி​யும் திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி கொல்​கத்தா உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தது.

இந்​தச் சோதனை​கள் அரசி​யல் உள்​நோக்​கம் கொண்​டவை என்​றும், மேற்கு வங்க சட்​டப்பேரவை தேர்​தலுக்கு முன்​பாக தங்​களை அச்​சுறுத்​தும் நோக்​கில் இந்த சோதனை நடத்​தப்​பட்​ட​தாகவும் திரிண​மூல் காங்​கிரஸ் குற்​றம்​சாட்​டி​யுள்​ளது. இந்த விவ​காரத்​தில் சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விடக்​கோரி அமலாக்​கத் துறை​யும் நீதி​மன்​றத்தை நாடி​யுள்​ளது.

திரிண​மூல் காங்​கிரஸ் மற்​றும் அமலாக்​கத் துறை இடையே​யான வழக்கு உயர்​நீ​தி​மன்​றத்​தில் நீதிபதி சுவ்ரா கோஷ் அமர்வு முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, ஐ-பேக் வழக்கு விசா​ரணை தொடங்​கு​வதற்கு முன்​பாகவே, இருதரப்பு வழக்​கறிஞர்​களிடையே தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது. அவர்​கள் வெளி​யேற நீதிபதி பலமுறை உத்​தர​விட்​டும் அதற்கு அவர்​கள் செவி​சாய்க்​க​வில்​லை. இதையடுத்​து, வழக்​கோடு தொடர்​பில்​லாத வழக்​கறிஞர்​கள் 5 நிமிடங்​களுக்​குள் வெளி​யேற வேண்​டும் எனவும், இல்​லை​யென்​றால் நான் நீதி​மன்​றத்தை விட்டு வெளி​யேறி​விடு​வேன் என நீதிபதி கடுமை​யாக எச்​சரிக்கை விடுத்​தார். அதன்​பிறகும் நீதி​மன்​றத்​தில் ஒழுங்கு திரும்​ப​வில்​லை.

தனது எச்​சரிக்​கை​யும் மீறி நீதி​மன்​றத்​தில் கூச்​சல் குழப்​பம் அதி​க​மாக இருந்​த​தால் கோபமடைந்த நீதிபதி சுவ்ரா கோஷ் வழக்கு விசா​ரணையை ஜனவரி 14-ம் தேதிக்கு ஒத்​தி​வைத்​து​விட்டு நீதி​மன்​றத்தை விட்டு வெளி​யேறி​னார்.

அமித் ஷாவுக்கு எதிரான ஆதாரம் உள்ளது: மம்தா

அமித் ஷாவுக்கு எதிரான ஆதாரங்கள் அடங்கிய பென் டிரைவ் என்னிடம் உ ள்ளது. நிலக்கரி ஊழல் குறித்த உண்மைகளை வெளியிடுவேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “நிலக்கரி ஊழலில் இருந்து கிடைத்த அனைத்துப் பணமும் இறுதியில் அமித் ஷாவிடம் தான் சென்றடைந்துள்ளது. அந்த நிதி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாஜக எம்பி ஜெகந்நாத் சர்கார் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி ஆகியோர் மூலமாக அனுப்பப்பட் டுள்ளது.

நான் வகிக்கும் பதவிக்கு மரியாதை அளித்து இதுவரை அமைதியாக இருந்தேன். ஆனால், ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் எனக்கும் எனது அரசுக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு நிலக்கரி ஊழலில் உள்ள தொடர்பு குறித்த விவரங்களை வெளியிடுவேன் என்று எச்சரிக்கை விடுக்கிறேன். இவ்வாறு மம்தா தெரிவித்துள்ளார்.

இதனிடையே கொல்கத்தாவில் உள்ள ஐ-பேக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையைக் கண்டித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா ஜாதவ்பூரிலிருந்து ஹஸ்ரா சந்திப்பு வரை ஒரு மாபெரும் கண்டனப் பேரணியை நேற்று நடத்தினார்.

<div class="paragraphs"><p>மேற்கு வங்க மாநிலம்  ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் நேற்று மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது. இதில், மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி,  ஜுன் மாலியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: பிடிஐ</p></div>
ஐஇடி தரவு மேலாண்மை தளம்: அமித் ஷா தொடங்கி வைத்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in