ஐஇடி தரவு மேலாண்மை தளம்: அமித் ஷா தொடங்கி வைத்தார்

ஐஇடி தரவு மேலாண்மை தளம்: அமித் ஷா தொடங்கி வைத்தார்
Updated on
1 min read

குருகிராம்: ஹரியானாவின் குருகிராம் மாவட்டம் மானேசரில் உள்ள தேசிய பாதுகாப்பு படை (என்எஸ்ஜி) முகாமில் தேசிய ஐஇடி தரவு மேலாண்மை அமைப்பு (என்ஐடிஎம்எஸ்) அமைக்கப்பட்டுள்ளது.

இது, தீவிரவாதத்துக்கு எதிரான அடுத்த தலைமுறை பாதுகாப்பு கேடயமாகவும் நாட்டில் நடைபெறும் அனைத்து வகை குண்டுவெடிப்புகளுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாகவும் செயல்படும் என கூறப்படுகிறது. இது, அனைத்து வகை குண்டுவெடிப்புகளையும் துல்லியமாக ஆய்வு செய்வதற்காக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் நவீன சாதனங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் என்ஐடிஎம்எஸ் தளத்தை அமைச்சர் அமித் ஷா நேற்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், ‘‘இந்த என்ஐடிஎம்எஸ் காவல் துறை, புலனாய்வு முகமைகள், மாநில தீவிரவாத எதிர்ப்புப் படைகள், என்ஐஏ போன்ற மத்தியப்படைகளுக்கு குண்டுவெடிப்புகளின் செயல்பாட்டு முறைகளை பகுப்பாய்வு செய்ய விரிவான தரவுகளை வழங்கும்’’ என்றார்.

ஐஇடி தரவு மேலாண்மை தளம்: அமித் ஷா தொடங்கி வைத்தார்
சத்தீஸ்கர் மாநிலத்தில் 63 நக்சலைட்கள் சரண்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in