இசிஐநெட் மென்​பொருளை நீக்க தேர்​தல் ஆணையத்திடம் காங். எம்பி சசி தரூர் வலியுறுத்தல்

இசிஐநெட் மென்​பொருளை நீக்க தேர்​தல் ஆணையத்திடம் காங். எம்பி சசி தரூர் வலியுறுத்தல்
Updated on: 
1 min read

புதுடெல்லி: கோவா மாநில எஸ்​ஐஆர் பணி​யின்​போது 97 பேரின் பெயர்​கள் வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்​டன. அவர்​கள் உரிய ஆவணங்​களு​டன் தேர்​தல் ஆணைய அதி​காரி​களிடம் புகார் அளித்​தனர். பல்​வேறு கட்ட ஆய்​வுக்​குப் பிறகு 97 பேரை​யும் வாக்​காளர் பட்​டியலில் சேர்க்க மாநில ஆணைய அதி​காரி​கள் முடிவு செய்​தனர்.

ஆனால் தேர்​தல் ஆணை​யத்​தின் இசிஐநெட் மென்​பொருள் கட்டமைப்​பின்​படி நீக்​கப்​பட்ட வாக்​காளர்​களின் பெயர்​களை மாநில அதி​காரி​களால் மீண்​டும் பட்​டியலில் சேர்க்க முடியவில்லை. இதுதொடர்​பாக கோவா தேர்​தல் ஆணை​யம் தரப்பில் தலை​மைத் தேர்​தல் ஆணை​யத்​திடம் 8 முறை கோரிக்கைகள் முன்​வைக்​கப்​பட்​டன. ஆனாலும் 97 பேரின் பெயர்கள் பட்​டியலில் சேர்க்​கப்​பட​வில்​லை. இதுதொடர்​பாக ஆங்கில ஊடகத்​தில் விரி​வான செய்தி வெளி​யிடப்​பட்டு உள்​ளது.

மேலும் தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமாருக்​கும், தேர்​தல் ஆணை​யர்​கள் சுக்​பீர் சாந்​து, விவேக் ஜோஷி ஆகியோருக்​கும் இடையே கருத்து வேறு​பாடு​கள் நில​வுவ​தாக​வும் ஆங்​கில ஊடக செய்​தி​யில் சுட்​டிக் காட்​டப்​பட்டு உள்​ளது. இதுகுறித்து காங்​கிரஸ் எம்பி சசி தரூர் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதிவு​களில் கூறி​யிருப்​ப​தாவது: ஆங்​கில ஊடகத்​தின் புல​னாய்வு செய்​திக்கு தேர்​தல் ஆணை​யம் அளித்த விளக்​கம் திருப்​தி​கர​மாக இல்​லை.

கோவா வாக்​காளர் பட்​டியலில் 97 பேரின் பெயர்​கள் நீக்கப்பட்டதற்கு தெளி​வான விளக்​கம் இல்​லை. ஆங்​கில ஊடக செய்​தி​யில் எழுப்​பப்​பட்டுள்ள 14 கேள்வி​களுக்கும் தெளி​வான, வெளிப்​படை​யான பதிலை தேர்​தல் ஆணை​யம் அளிக்க வேண்டும். மோச​மான பா​திப்​பு​களை ஏற்​படுத்​திய இசிஐநெட் மென்​பொருளை நீக்க வேண்​டும். இதனால் ஏற்​பட்ட பாதிப்புகளை சரி செய்​ய வேண்​டும்​. இவ்​வாறு அவர் கூறியுள்ளார்​.

இசிஐநெட் மென்​பொருளை நீக்க தேர்​தல் ஆணையத்திடம் காங். எம்பி சசி தரூர் வலியுறுத்தல்
எடுத்த நடவடிக்கைகள் என்ன? - முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள் குறித்து ஆர்டிஐ-யில் கேட்கலாம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in