போதை மருந்து கடத்தல் அச்சுறுத்தல் நீடிக்கிறது: சிபிஐசி தலைவர் கவலை

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

புதுடெல்லி: இந்​தி​யா​வில் போதை மருந்து கடத்​தல் அச்​சுறுத்​தல் தொடர்ந்து நீடித்து வரு​வ​தாக மத்​திய மறை​முக வரி​கள் மற்​றும் சுங்க வாரி​யத்​தின் (சிபிஐசி) தலை​வர் விவேக் சதுர்​வேதி தெரி​வித்​துள்​ளார்.

வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரகத்​தின் (டிஆர்ஐ) 68-வது நிறுவன நாள் விழா​வில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து கூறிய​தாவது: போதைப் பொருள் கடத்​துபவர்​கள் கூட்​டணி அமைத்​துக்​கொண்டு கூரியர், இ-காமர்ஸ் நிறு​வனங்​களை ஏமாற்றி போதைப்​பொருள் கடத்​தலில் தொடர்ந்து ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

கடத்​தல்​காரர்​கள் கடல்​வழி​யாக​வும் சிந்​தடிக் போதைமருந்​துகளை இந்​தி​யா​வுக்​குள் கொண்டு வரு​கின்​றனர். எனவே​தான், இந்​தி​யா​வில் போதைப் பொருள் கடத்​தல் என்​பது இன்​னும் அச்​சுறுத்​தலாகவே இருந்து வரு​கிறது.

வளர்ந்து வரும் போதை மருந்து கடத்​தல் அச்​சுறுத்​தல்​களுக்கு மத்​தி​யில் கடத்​தல் முறை​களை முன்​கூட்​டியே அறிய மேம்​பட்ட தரவு பகுப்​பாய்​வு​களைப் அதி​காரி​கள் பயன்​படுத்த வேண்​டும்.

65 கிலோ கொகைன்: கடந்த ஆண்​டில் மட்​டும் 65 கிலோ கொகைன், 225 கிலோ மெத்​த​பெட்​டமைன், 9 டன் கஞ்சா பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது. போதைமருந்து கடத்​தல் நெட்​வொர்க்கை அழிக்​கும் பணி​யில் டிஆர்ஐ தீவிர​மாக ஈடு​பட்​டு வரு​கிறது. இவ்​​வாறு விவேக்​ சதுர்வேதி தெரி​வித்​​தா​ர்​.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
300 இண்டிகோ விமான சேவைகள் ரத்து: இரண்டாவது நாளாக பயணிகள் தவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in