‘சர்வதேச சைபர் குற்றங்களை தடுக்க வேண்டும்’ - பிரதமர் மோடி வலி​யுறுத்​தல்

‘சர்வதேச சைபர் குற்றங்களை தடுக்க வேண்டும்’ - பிரதமர் மோடி வலி​யுறுத்​தல்
Updated on: 
1 min read

புதுடெல்லி: சர்வதேச அளவி​லான சைபர் குற்றங்களை தடுக்க உலக நாடு​கள், தகவல் தொழில்​நுட்​பம், தொலைத்​தொடர்​பு, நிதி சேவை சார்ந்த நிறு​வனங்​கள் ஒன்​றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

மத்​திய தொலைத்​தொடர்பு துறை சார்​பில் கடந்த 2017-ம் ஆண்​டு​முதல் தொலைத்​தொடர்பு மாநாடு நடத்​தப்​பட்டு வரு​கிறது. இதன்படி 10-வது தொலைத்​தொடர்பு மாநாடு டெல்​லி​யில் நேற்று தொடங்​கியது. இதன் ஒரு பகு​தி​யாக கண்​காட்​சி​யும் நடைபெறுகிறது. மாநாடு மற்​றும் கண்​காட்​சி​யில் உள்​நாடு, வெளி​நாடு​களை சேர்ந்த 500 நிறு​வனங்​கள், 600 ஸ்டார்ட் அப் நிறு​வனங்​கள், 100 நாடு​களை சேர்ந்த 1,000-க்​கும் மேற்பட்ட தொலைத்​தொடர்பு நிபுணர்கள் பங்​கேற்று உள்​ளனர்.

டெல்​லி​யில் நேற்று தொலைத்​தொடர்பு மாநாட்டை தொடங்கி​ வைத்​த பிரதமர் மோடி பேசி​ய​தாவது: ஸ்மார்ட் மொபைல்​ போன்​களால் மக்​களின் வாழ்க்கை எளி​தாகி உள்​ளது. நூற்​றுக்​கணக்​கான அரசு சேவை​கள் மொபைல்​போன்​கள் வாயி​லாக பொது​மக்​களுக்கு நேரடி​யாக வழங்​கப்​படு​கின்​றன. கல்​வி, சுகா​தா​ரம், டிஜிட்​டல் பணப் பரி​மாற்​றத்​தில் மொபைல்​போன்​கள் முக்​கிய பங்கு வகிக்​கின்​றன.

கரோனா பெருந்​தொற்று காலத்​தில் ஒட்​டுமொத்த உலக​மும் முடங்​கியது. ஆனால் இந்​தி​யா​வில் மொபைல்​போன், இணை​யசேவை காரண​மாக கல்வி நிறு​வனங்​கள், வங்​கி​கள் உள்​ளிட்ட அனைத்து சேவை​களும் ஆன்​லைனில் வழக்​கம்​போல இயங்​கின.

கடந்த கால ஆட்​சிகளில் அரசு நலத்​திட்​டங்​களில் சுமார் ரூ.5 லட்​சம் கோடிக்​கும் அதி​க​மான தொகையை இடைத்​தரகர்​கள் அபகரித்​தனர். டிஜிட்​டல் தொழில்​நுட்​பங்​களால் இந்த மோசடியை தடுக்கப்பட்டுள்ளது. சர்​வ​தேச அளவில் சைபர் குற்​றங்​கள் அதி​கரித்து வரு​கின்​றன.

ஏதோ ஒரு நாட்​டில் இருக்​கும் குற்​ற​வாளி பல்​வேறு நாடு​களில் சைபர் மோசடிகளில் ஈடு​படு​கிறார். இது​போன்ற குற்​றங்​களை தடுத்து நிறுத்த வேண்​டும். மேலும் டீப்​ஃபேக் புகைப்​படங்​கள், வீடியோக்​கள் மிகப்​பெரிய சவால்​களாக உரு​வெடுத்து உள்​ளன. சர்​வ​தேச சைபர் குற்​றங்​களை தடுக்​க​வும், டீப்​ஃபேக் சவால்​களை எதிர்​கொள்​ள​வும் உலக நாடு​கள் ஒன்​றிணைந்து செயல்பட வேண்டும். இவ்​வாறு அவர் பேசினார்.

‘சர்வதேச சைபர் குற்றங்களை தடுக்க வேண்டும்’ - பிரதமர் மோடி வலி​யுறுத்​தல்
போராட்டங்களால் டெல்லியில் அசாதாரண நிலை: தலைமைத் தேர்தல் ஆணையரின் பாதுகாப்புக்கு கூடுதல் வீரர்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in