தேர்தல் முறைகேடுகளை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை - புதிய உதவி எண்கள் அறிவிப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

புதுடெல்லி: தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க புதிய உதவி எண்களை வெளியிட்டுள்ள வருவாய் புலனாய்வு இயக்குநரகம், தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றங்களுக்கான 2026 தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்கும் ஒருங்கிணைப்பு முகமையாக, இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) செயல்படுகிறது.

தேர்தல் செயல்முறையைப் பாதிக்கக்கூடிய அல்லது சீர்குலைக்கக்கூடிய கடத்தல் பொருட்கள் மற்றும் சட்டவிரோத வர்த்தகம் போன்ற நடவடிக்கைகளைத் தடுப்பதன் மூலம், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதில் இந்த இயக்குநரகம் முக்கியப் பங்காற்றுகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றங்களுக்கான 2026 தேர்தலுக்காக தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காலத்தில், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், போதைப்பொருட்கள், தங்கம், வெளிநாட்டு பணம், தடை செய்யப்பட்ட பொருட்கள் அல்லது வேறு ஏதேனும் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பான எந்தவொரு தகவலையும் அதற்கென உள்ள பிரத்யேக உதவி எண்கள் மூலம் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திடம் (DRI) தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

வெற்றிகரமாக கண்டறிவதற்கோ / பறிமுதல் செய்வதற்கோ வழிவகுக்கும்; குறிப்பிடத்தக்க நடவடிக்கை எடுக்கக்கூடிய தகவல்களை வழங்கும் நபர்களுக்கு, அரசு விதிகளின்படி வெகுமதி வழங்கப்படும் என்றும், தகவல் அளிப்பவர்கள் பற்றிய விவரங்கள் பாதுகாக்கப்படும் என்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

உதவி எண்கள்: 6385161640, 6385181640

மின்னஞ்சல் முகவரி: driczu@gov.in / driczu@nic.in

வாட்ஸ்அப் எண்கள் : 6385161640, 6385181640

இதன் நோக்கம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், குடிமக்களின் தீவிரப் பங்கேற்பை ஊக்குவிப்பதும், தேர்தல்களின் நேர்மையைக் சீர்குலைக்கக்கூடிய முறைகேடுகளைத் தடுப்பதுமாகும். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை உறுதி செய்வதிலும் பொதுமக்களின் ஒத்துழைப்பை நாடுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
வர்த்தக எல்பிஜி சிலிண்டர் விநியோகம் 70% அளவுக்கு சீரடைந்ததாக மத்திய அரசு தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in