கர்நாடக அரசியலில் இன்று அதிரடி மாற்றம்: ராஜினாமா செய்கிறார் சித்தராமையா

சித்தராமையா

சித்தராமையா

Updated on
1 min read

பெங்களூரு / புதுடெல்லி: கர்​நாட​கா​வில் கடந்த 2023ம் ஆண்டு நடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் காங்​கிரஸ் கட்சி வென்​றதை தொடர்ந்து முதல்​வர் பதவிக்கு கடும் போட்டி ஏற்​பட்​டது.

மூத்த தலை​வர்​களான‌ சித்​த​ராமை​யா, டி.கே.சிவகு​மார், ஜி.பரமேஷ்வர் ஆகிய மூவருக்​கும் இடையே போட்டி நில​வியது. நீண்ட இழுபறிக்கு பின்​னர் சித்​த​ராமை​யா​வுக்கு முதல்​வர் பதவியும், டி.கே.சிவகு​மாருக்கு துணை முதல்​வர் பதவி​யும் வழங்கப்​பட்​டது. அப்​போது இரு​வருக்​கும் தலா இரண்​டரை ஆண்டு​கள் முதல்​வர் பதவி வழங்க காங்​கிரஸ் மேலிடத் தலைவர்கள் சம்​மதம் தெரி​வித்​த​தாக கூறப்​படு​கிறது.

சித்​த​ராமையா முதல்​வ​ராக பொறுப்​பேற்று 3 ஆண்​டு​கள் ஆன நிலை​யில், டி.கே.சிவகு​மாருக்கு முதல்​வர் பதவியை வழங்க வேண்​டும் என அவரது ஆதர​வாளர்​கள் போர்க்​கொடி தூக்​கினர். இதையடுத்து டெல்​லி​யில் நேற்று முன்​தினம் மாலை காங்​கிரஸ் தேசி​யத் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே தலை​மை​யில் முதல்வர் மாற்ற விவ​காரம் தொடர்​பான ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில் மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்​தி, சித்​த​ராமை​யா, டி.கே.சிவகு​மார் உள்​ளிட்​டோர் பங்கேற்றனர்.

சுமார் 6 மணி நேரம் நடை​பெற்ற இந்த கூட்​டத்​தில் கர்​நாட​கா​வில் முதல்​வரை மாற்​று​வது குறித்து விரி​வாக விவா​திக்​கப்​பட்​டது. அப்போது மேலிடத் தலை​வர்​கள், சித்​த​ராமை​யாவை முதல்​வர் பதவி​யில் இருந்து வில​கு​மாறு கூறினர். மேலும் மாநிலங்​கள​வைத் தேர்​தலில் போட்​டி​யிட்​டு, தேசிய அரசி​யலில் கவனம் செலுத்துமாறு வலி​யுறுத்​தினர்.

இதையடுத்து அவர் முதல்​வர் பதவியை விட்​டுக்​கொடுக்க சம்மதித்​த​தாக கூறப்​படு​கிறது. இன்று பெங்​களூரு திரும்​பும் முதல்​வர் சித்​த​ராமை​யா, அமைச்​சரவை கூட்​டத்​தை நடத்த உள்ளார். இதை தொடர்ந்து காங்​கிரஸ் மேலிடத் தலை​வர் ரன்​தீப் சிங் சுர்​ஜே​வாலா, சித்​த​ராமை​யா​வின் ராஜி​னாமா முடிவை அறிவிப்​பார் என காங்​கிரஸ் வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன.

இந்​நிலை​யில் முதல்​வர் சித்​த​ராமை​யா, இன்று கர்​நாடக ஆளுநர் தாவர்​சந்த் கெலாட்டை சந்​தித்து அவர் தனது முதல்​வர் பதவியை ராஜி​னாமா செய்​வதற்​கான, கடிதத்தை வழங்​கு​வார் என தெரிகிறது.

<div class="paragraphs"><p><em>சித்தராமையா</em></p></div>
வெளிநாட்டு காவல் துறை போல் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படைக்கு பிரத்யேக சீருடை அறிமுகம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in