பிரம்மபுத்திரா நதியின் கீழ் இரட்டை சுரங்கப்பாதை: ரூ.18,662 கோடி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரம்மபுத்திரா நதியின் கீழ் இரட்டை சுரங்கப்பாதை: ரூ.18,662 கோடி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Updated on
1 min read

புதுடெல்லி: அ​சாமின் பிரம்​மபுத்​திரா நதி​யின் கீழ் ரூ.18,662 கோடி செல​வில் இரட்டை சுரங்​கப் பாதைகள் அமைக்க மத்​திய அமைச்​சரவை ஒப்​புதல் வழங்கி உள்​ளது. ஒரு சுரங்கப் பாதையில் ரயில்களும், மற்றொரு சுரங்கப் பாதையில் வாகனங்களும் இயக்கப்பட உள்ளன.

அசாம் மாநிலம் கோஹ்பூரில் இருந்து நுமலிகர் வரை பிரம்​மபுத்​திரா நதி​யின் கீழ் 32 மீட்​டர் ஆழத்​தில் இரட்டை சுரங்​கப் பாதைகள் அமைக்​கப்பட உள்​ளன. இவை 33.7 கி.மீ. நீளம் கொண்​ட​தாக​வும் 4 வழிப் பாதை​யாக​வும் இருக்​கும்.

திட்​டத்​தின் மதிப்​பீடு ரூ.18,662 கோடி. கோஹ்பூர் முதல் நுமலிகர் வரையி​லான சுரங்​கப் பாதை​யில் ஆங்​கேங்கே செயற்கை தீவு​களும் உரு​வாக்​கப்பட உள்​ளன. பிரம்​மபுத்​திரா சுரங்​கப் பாதை திட்​டத்​துக்கு மத்​திய அமைச்​சரவை ஒப்​புதல் அளித்​துள்​ளது. இதுதொடர்​பாக அசாம் முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது:

கடந்த 2021-ம் ஆண்​டில் பிரம்​மபுத்​திரா சுரங்​கப் பாதை திட்​டம் தயாரிக்​கப்​பட்​டது. இதற்கு மத்​திய அமைச்​சரவை தற்​போது ஒப்​புதல் வழங்கி உள்​ளது. இதற்​காக பிரதமர் நரேந்​திர மோடிக்கு அசாம் மக்​கள் சார்​பில் நன்​றியை தெரி​வித்து கொள்​கிறேன்.

கோஹ்பூரில் இருந்து நுமலிகர் வரை 240 கி.மீ. தொலைவை சாலை மார்க்​க​மாக கடந்து செல்ல 6 மணி நேர​மாகிறது. பிரம்​மபுத்​திரா நதி​யின் அடி​யில் சுரங்​கப்​பாதை அமைக்​கப்​பட்​டால் 20 நிமிடங்​களில் கோஹ்பூரில் இருந்து நுமலிகர் சென்​றடைய முடி​யும்.

அசாமில் பிரம்ம புத்​திரா நதி​யின் மேலே ஏற்​கெனவே 3 ரயில்வே மேம்​பாலங்​கள் கட்​டப்​பட்டு உள்​ளன. முதல் முறை​யாக ரயில்வே சுரங்​கப்​பாதை அமைக்​கப்பட உள்​ளது. இந்த திட்​டத்​தால் அசாம் மட்​டுமன்றி ஒட்​டுமொத்த வடகிழக்​கும் பலன் அடை​யும். வர்த்​தகம், சுற்​றுலா மேம்​படும். சரக்​கு, பயணி​கள் போக்​கு​வரத்து செலவு கணிச​மாக குறை​யும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

கடந்த 1962-ம் ஆண்டு போரின்​போது பிரம்​மபுத்​திரா நதி​யின் வழி​யாகவே சீன ராணுவம் இந்​திய பகு​தி​களுக்​குள் ஊடுரு​வியது. பாது​காப்​பு ரீ​தி​யாக இந்த நதி மிக​வும் முக்​கிய​மானது. தற்​போது அசாம், அருணாச்சல பிரதேசத்​தில் பிரம்​மபுத்​திரா நதி​யின் மீது 5 மேம்​பாலங்​கள் உள்​ளன. போர் மூண்​டால் மேம்​பாலங்​கள் தகர்க்​கப்பட வாய்ப்பு இருக்​கிறது. எனவே பிரம்​மபுத்​திரா நதி​யின் கீழே சுரங்​கப் பாதை அமைக்​கப்​படு​கிறது.

நகர்ப்புற சவால் நிதி.. - பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்தியது. இதில் நாட்டில் நகர்ப்புற மேம்பாடு, அடிப்படைக் கட்டமைப்பு வசதித்திட்டங்களுக்காக 16 லட்சம் கோடியை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதில் ரூ.1 லட்சம் கோடி நகர்ப்புற சவால் நிதிக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

பிரம்மபுத்திரா நதியின் கீழ் இரட்டை சுரங்கப்பாதை: ரூ.18,662 கோடி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிஹாரில் விஷம் அருந்திய 4 சிறுமிகள் உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in