நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் தனியாக கோஷம்

நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் தனியாக கோஷம்
Updated on
1 min read

நாடாளுமன்றத்துக்கு வெளியே தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் எதிர் எதிராக நின்று கோஷமிட்டனர்.

வினாத்தாள் கசிவு விவகாரத்தை அரசியலாக்குவதாக குற்றம் சாட்டிய ஆளும் கட்சி எம்.பி.க்கள் ‘‘வெட்கக் கேடு, வெட்கக்கேடு’’ என கோஷம் எழுப்பினர். பதிலுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள், ‘‘ராஜினாமா செய், பதவி விலகு’’ என கோஷம் எழுப்பினர்.

இந்தப் போராட்டத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா, அகிலேஷ் யாதவ் உட்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். இதற்கிடையே திமுக எம்பி-க்கள் தனியாக ஒரு இடத்தில் நின்று நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரி கோஷம் எழுப்பினர்.

நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் தனியாக கோஷம்
‘நீட்’ பிரச்சினை: திருப்பரங்குன்றத்தில் ரயிலை மறித்து போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in