சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்படுவது ஏன்? - மாநிலங்களவையில் திமுக எம்பி வில்சன் கேள்வி

திமுக எம்​.பி. வில்​சன்

திமுக எம்​.பி. வில்​சன்

Updated on
1 min read

புதுடெல்லி: திமுக எம்​.பி.வில்​சன் மாநிலங்​களவை​யில் நேற்று பூஜ்ஜிய நேரத்​தில் பேசி​ய​தாவது: யுபிஎஸ்​சி-​யின் சிவில் சர்​வீஸ் முதல்​நிலை தேர்வு இந்தி மற்​றும் ஆங்​கிலத்​தில் மட்​டுமே நடத்தப்படு​கிறது.

இதனால் தென்​னிந்​தியா மற்​றும் வடகிழக்கு மாநிலங்​களைச் சேர்ந்த திறமை​யான தேர்​வர்​கள் முதல் சுற்​றிலேயே வெளியேற்றப்​படு​கிறார்​கள். இதனால் அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு கிடைப்​ப​தில்​லை. எனவே தமிழ் உட்பட அனைத்து 22 மொழிகளி​லும் சிவில் சர்​வீஸ் முதல்​நிலைத் தேர்வு நடத்​தப்பட வேண்​டும். யுபிஎஸ்சி தேர்​வுக்​கான மதிப்​பெண் வழங்​கும் முறை​யில் ஆங்​கிலத்​துக்கு முன்​னுரிமை அளிக்கப்படுகிறது.

தேர்​வில் தேர்ச்சி பெற்ற பிறகும், நேர்​காணலில் மாணவர்​களுக்கு மிகக் குறைந்த மதிப்​பெண்​களே கிடைக்​கிறது. ஓபிசி, எஸ்​சி, எஸ்டி மாணவர்​களுக்கு இது மிக​வும் பொருந்​தும். மேலும், ​தேர்வு நடை​முறை முழு​மை​யாக நிறைவடைய 15 மாதங்​கள் ஆகின்​றன. ஒரு மாணவர் தோல்வி அடைந்​தால், அவருடைய முழு ஆண்​டும் வீணாகி விடு​கிறது. எனவே, யுபிஎஸ்சி முதல்​நிலைத் தேர்வை ஆண்​டுக்கு 2 முறை நடத்த வேண்​டும். இவ்​வாறு எம்​.பி. வில்​சன் மாநிலங்​களவை​யில் பேசி​னார்.

மத்​தி​ய இணை அமைச்​சர் ஜிதேந்​திர சிங் சமீபத்தில் ஒரு கேள்விக்கு அளித்த பதிலில், “சி​வில் சர்​வீஸ் முதல்​நிலை தேர்வுக்கு பிறகு, அதற்​கான தற்​காலிக விடைக்​குறிப்பை யுபிஎஸ்சி, தனது இணை​யதளத்​தில் வெளி​யிடும். உச்ச நீதி​மன்ற தீர்ப்​புக்கு இணங்க இம்​முடிவு எடுக்​கப்​பட்​டுள்​ளது. இந்த புதிய நடை​முறை, 2026-ம் ஆண்டு நடை​பெறும் சிவில் சர்​வீஸ் முதல்​நிலை தேர்​வில் இருந்​து தொடங்​கும்​” என்​றார்​.

<div class="paragraphs"><p>திமுக எம்​.பி. வில்​சன்</p></div>
எம்எல்சி பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in