தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு 3,500 கனஅடி வீதம் காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு 3,500 கனஅடி வீதம் காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு
Updated on
1 min read

பெங்களூரு/ புதுடெல்லி: டெல்​லி​யில் காவிரி நீர் ஒழுங்​காற்​றுக் குழு கூட்​டம் அதன் தலை​வர் எஸ்​.கே.ஹல்​தர் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் கர்​நாட​கா, தமிழ்​நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்​களை சேர்ந்த நீர்ப்​பாசனத் துறை அதிகாரி​கள் பங்​கேற்​றனர்.

இதில் தமிழக அரசின் தரப்​பில், “உச்​ச நீ​தி​மன்​றத்​தின் தீர்ப்பின்படி கர்​நாடகா காவிரி​யில் தமிழகத்​திற்கு வழங்க வேண்டிய நீரை மாத​வாரி​யாக வழங்​க​வில்​லை. இதனால் பாசனத்​திற்​காக மேட்​டூர் அணை இன்​னும் திறக்​கப்​பட​வில்​லை. எனவே கர்​நாடக அரசு தமிழகத்​துக்கு வழங்க வேண்​டிய நீரை உடனடி​யாக திறந்​து​விட உத்​தர​விட வேண்​டும்” என வலியுறுத்தப்பட்​டது.

அதற்கு கர்​நாடக அரசின் தரப்​பில், “கர்​நாட​கா​வில் நிகழாண்​டில் தென்​மேற்கு பருவ மழை பொய்த்​த​தால் கிருஷ்ண​ராஜ​சாகர், கபினி, ஹாரங்​கி, ஹேமாவதி ஆகிய அணை​களில் 50% அளவுக்கு மட்​டுமே நீர் இருப்பு உள்​ளது. பெங்​களூரு மாநகரின் குடிநீர் தேவைக்கு மட்​டுமே நீர் இருப்​பில் உள்​ளது. எனவே தமிழகத்​துக்கு காவிரி நீரை திறந்​து​விட இயலாது” என தெரிவிக்​கப்​பட்​டது.

இதனை ஏற்க மறுத்த காவிரி நீர் ஒழுங்​காற்று குழு, “உச்சநீதிமன்ற உத்​தர​வின்​படி தமிழகத்​துக்கு காவிரி நீரை திறந்து​விட வேண்​டும். மழை பற்​றாக்​குறை காரண​மாக அணைகளில் உள்ள நீர் இருப்​பின் அளவுக்கு ஏற்​ற​வாறு நீரை பங்கிட்​டுக் கொள்ள வேண்​டும். கிருஷ்ண​ ராஜ​சாகர் மற்​றும் கபினி ஆகிய இரு அணை​களில் இருந்​தும் தமிழகத்​துக்கு அடுத்த 15 நாட்​களுக்கு தின​மும் 3500 கன அடி நீரை திறந்​து​விட வேண்டும். இதனை ஜூலை 29-ம் தேதி காலை 8 மணி முதல் இருமாநில எல்​லை​யான பிலிகுண்​டுலு அளவீட்டு நிலை​யத்​தில் இருந்து தமிழகத்​துக்கு நீர் செல்​வதை உறுதி செய்ய வேண்​டும்” என உத்​தர​விட்​டது.

அவசர ஆலோ​சனை:

இதையடுத்து கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மார், நீர்ப்​பாசனத்​துறை அமைச்​சர் ராமலிங்க ரெட்​டி, நீர்ப்​ பாசனத்​துறை அதி​காரி​களு​டன் நேற்று அவசர ஆலோ​சனை மேற்​கொண்​டார். இந்த கூட்​டத்​துக்​குப் ​பின் ராமலிங்க ரெட்டி கூறுகை​யில், “மழை பெய்​யாத​தால் குடிநீருக்கே தட்​டுப்​பாடு ஏற்பட்​டுள்​ளது. இந்த சூழலில் தமிழ்​நாட்​டுக்கு நீரை திறந்​து​விட இயலாது. காவிரி நீர் ஒழுங்​காற்று குழு​வின் உத்​தரவை எதிர்த்து கா​விரி மேலாண்மை ஆணை​யத்​தில்​ முறை​யிட உள்ளோம்​” என்றார்​.

தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு 3,500 கனஅடி வீதம் காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு
நீட் போராட்ட மாணவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in