நீட் போராட்ட மாணவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் போராட்ட மாணவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

புதுடெல்லி: நீட் தேர்வு போராட்​டத்​தில் ஈடு​பட்ட மாணவர்​களை உடனடி​யாக விடுவிக்க வேண்​டும் என்​று மத்​திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் வினாத்​தாள் கசிவுக்கு எதி​ரான போராட்​டத்​தின்​போது, காவல்​துறை​யினர் பெல்​லட் குண்​டு​கள், கண்​ணீர்ப் புகை குண்​டு​களை பயன்​படுத்தி மாணவர்​கள் மீது தாக்​குதல் நடத்​தி​ய​தாக புகார் எழுந்​தது. அத்​து​மீறிய காவல் ​துறை​யினர் மீது நடவடிக்கை எடுக்கக்​கோரி தொடரப்பட்ட வழக்​கு​கள் உச்​ச நீ​தி​மன்​றத்​தில் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்​றும் நீதிப​தி​கள் ஜாய்​மால்யா பக் ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசாரணைக்கு வந்​தது.

அப்​போது, மனு​தா​ரர்​கள் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர்​கள் கோபால் சங்​கர ​நா​ராயணன் மற்​றும் ஷியாம் திவான் ஆகியோர் ஆஜராகி தங்கள் வாதத்தை முன்வைத்தனர். இதுபோல மத்​திய அரசின் சார்​பில் ஆஜரான சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்​தா தனது வாதங்களை முன்வைத்தார்.

இதையடுத்து நீதிப​தி​கள் கூறிய​தாவது: போராட்​டம் நடை​பெற்ற இடங்​களில் உள்ள அனைத்து சி.சி.டி.​வி, ட்ரோன் கேமரா பதிவுகளைத் பாது​காக்க வேண்​டும். போராட்​டத்​தில் கலந்துகொண்ட மாணவர்​களின் புகைப்​படங்​கள், தனி​நபர் விவரங்​களைச் சமூக வலை​தளங்​கள் அல்​லது பொது​வெளி​யில் வெளி​யிடக் கூடாது. குற்​றப் பின்​னணி இல்​லாத மாணவர்​கள் மீது எவ்​விதக் கடுமை​யான அல்​லது பழி​வாங்​கும் நடவடிக்​கை​யும் எடுக்​கப்​படக் கூடாது.

பல மாநிலங்​களில் போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​தால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்​கப்​பட்​டுள்ள 18 வயதிற்​குட்​பட்ட சிறு​வர்​களை உடனடி​யாக விடு​தலை செய்ய வேண்​டும். அதிக அளவில் காவல்​துறையை பயன்​படுத்​தி​யது, மாணவர்​கள் மீது தடியடி நடத்​தி​யது உள்​ளிட்​டவை தொடர்​பாக பதிலளிக்க டெல்​லி, மகா​ராஷ்டி​ரா, பிஹார், கேரளா, மத்​திய பிரதேசம், உத்தர பிரதேச மாநிலங்​களின் தலை​மைச் செய​லா​ளர்​களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்​தர​விடப்​படு​கிறது. வி​சா​ரணை ஆகஸ்ட்​ 3ம்​ தேதிக்​கு ஒத்​திவைக்​கப்​படு​கிறது. இவ்​வாறு நீதிப​திகள்​ தெரிவித்தனர்.

நீட் போராட்ட மாணவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
தகவல் ஆணையர் நியமனங்களை 6 வாரங்களில் முடிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in