டிஜிட்டல் கைது மோசடி மூதாட்டியிடம் ரூ.26 லட்சம் பறிப்பு

டிஜிட்டல் கைது மோசடி மூதாட்டியிடம் ரூ.26 லட்சம் பறிப்பு
Updated on
1 min read

போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர் அருணா சின்சோல்கர் (64). இவரை கடந்த ஆண்டு நவம்பரில் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்ட நபர்கள், தீவிரவாத தடுப்புப் படையிலிருந்து பேசுவதாக மிரட்டி அவரை டிஜிட்டல் கைது செய்தனர்.

பின்னர் மிரட்டி அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.26.65 லட்சத்தை வேறு கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர். சம்பவம் நடந்து சில மாதங்களுக்கு பின்னர், தான் ஏமாற்றப்பட்டது அருணாவுக்குத் தெரியவந்தது. இதையடுத்து அவர் போபால் சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்தார்.

இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க உத்தரவிட்டது. அதன்படி சிபிஐ அதிகாரிகள் எப்ஐஆர் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

டிஜிட்டல் கைது மோசடி மூதாட்டியிடம் ரூ.26 லட்சம் பறிப்பு
ரூ.200 கோடி மோசடி வழக்கில் அப்ரூவராக ஜாக்குலின் மனு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in