“போராட்டம் தொடங்கிய முதல் நாளே பதவி விலக முன்வந்தார் தர்மேந்திர பிரதான்”

பாஜக மூத்த தலைவர் தகவல்
“போராட்டம் தொடங்கிய முதல் நாளே பதவி விலக முன்வந்தார் தர்மேந்திர பிரதான்”
Updated on
1 min read

புதுடெல்லி: மாணவர் போராட்டம் தொடங்கிய முதல் நாளே பதவியை ராஜினாமா செய்ய தர்மேந்திர பிரதான் முன்வந்ததாக பாஜக மூத்த தலைவரும் மத்தியப் பிரதேச அமைச்சருமான கைலாஷ் விஜயவர்கியா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிடிஐ-க்கு அவர் அளித்த பேட்டியில், “வங்கதேசம் மற்றும் இலங்கையில் நடந்ததுபோல வன்முறையைப் பரப்பி இந்தியாவை ஸ்திரமற்ற நிலைக்குத் தள்ள விரும்பிய வெளிநாட்டுச் சக்திகளின் திட்டங்களை தர்மேந்திர பிரதானின் ராஜினாமா முறியடித்துள்ளது. அவரது இந்த செயலுக்காக நான் அவரைப் பாராட்டுகிறேன்.

மாணவர் போராட்டம் தொடங்கிய முதல் நாளே, தேவைப்பட்டால் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகத் தயார் என்று பாஜக தலைவரிடம் தர்மேந்திர பிரதான் கூறி இருந்தார். அந்த நேரத்தில், ராஜினாமா செய்ய வேண்டாம் என்று கட்சித் தலைமை கூறியது. இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்ல என்றும் எனவே, இது குறித்து யாரிடமும் விவாதிக்க வேண்டாம் என்றும் கட்சித் தலைமை அவருக்கு அறிவுறுத்தியது.

சூழ்நிலைகள் மாறிய பிறகு பிரதான் பதவி விலக வேண்டும் என்று கட்சி முடிவு செய்ததும், அவர் உடனடியாக ராஜினமா செய்தார்.

தனக்கு அளிக்கப்பட்ட ஒவ்வொரு பொறுப்பையும் அவர் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் நிறைவேற்றினார்.

அவரது ராஜினாமாவ காங்கிரஸ் கொண்டாடுவது வெட்கக்கேடானது. அவர்கள் முன்னின்று நடத்தாத ஒரு போராட்டத்துக்கு அவர்கள் பெருமை தேடிக்கொள்கின்றனர். மாணவர் போராட்டத்தில் காங்கிரசுக்கு என்ன பங்கு இருந்தது? மாணவர்களே போராட்டத்தை தொடங்கினர். காங்கிரஸ் கட்சி அவர்களுக்குப் பின்னால் நின்றது. அவ்வளவுதான்.

மேற்கு வங்க தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் முற்றிலும் சோர்வடைந்திருந்தன. அந்த விரக்தியான நிலையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் அவர்களுக்கு ஒரு நம்பிக்கை கீற்றாக அமைந்தது. மாணவர் போராட்டத்தின்போது காங்கிரஸ் தலைவர்கள் யாரேனும் காவல்துறை நடவடிக்கையை எதிர்கொண்டார்களா?

ஆர்எஸ்எஸ் அமைப்பு கரையான் போல செயல்பட்டு நாட்டின் கல்வி முறையைச் சிதைத்துவிட்டதா ராகுல் காந்தி கூறும் குற்றச்சாட்டு அபத்தமானது. அவரது அறிவுத்திறன் குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். ஆர்எஸ்எஸ் என்றால் என்ன என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என்று கருதுகிறேன். நாடு சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு ஆர்எஸ்எஸ் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது.” என தெரிவித்தார்.

“போராட்டம் தொடங்கிய முதல் நாளே பதவி விலக முன்வந்தார் தர்மேந்திர பிரதான்”
மத்திய கல்வி அமைச்சராக பிரஹலாத் ஜோஷி பொறுப்பேற்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in