மாணவர்களின் தொடர் போராட்டங்களால் ரூ.10,000 கோடி இழப்பு ஏற்படும் என டெல்லி வர்த்தகர்கள் கவலை

காங்கிரஸ் பேரணியின் இடத்தை மாற்ற கோரிக்கை
மாணவர்களின் தொடர் போராட்டங்களால் ரூ.10,000 கோடி இழப்பு ஏற்படும் என டெல்லி வர்த்தகர்கள் கவலை
Updated on: 
1 min read

புதுடெல்லி: டெல்​லி​யில் தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் பதவி வில​கக் கோரி காங்கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் மற்​றும் சிஜேபி​யினர் தொடர் போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், போராட்​டம் மற்​றும் போக்​கு​வரத்து கட்​டுப்​பாடுகளால் இந்த மாதம் டெல்லி வணிகர்​களுக்கு ஏற்​கெனவே கிட்​டத்​தட்ட ரூ.3,000 கோடி இழப்பு ஏற்​பட்​டுள்​ள​தாக வர்த்​தக மற்​றும் தொழில் சம்​மேளனம் தெரி​வித்​தது.

அக்​டோபர் 10-ல் நடந்த போராட்​டங்​களால் ரூ.2,000 கோடியும், அக்​டோபர் 13 முதல் 16 வரை சாலைகள் மூடப்​பட்​டது மற்​றும் மெட்ரோ சேவை பாதிக்​கப்​பட்​ட​தால் ரூ.1,000 கோடியும் இழப்பு ஏற்​பட்​ட​தாக அதன் தலை​வர் பிரிஜேஷ் கோயல் கூறினார்.

இதில் சில்​லறை வணிகத்​துக்கு ரூ.1,800 கோடியும், மொத்த வியாபாரத்​துக்கு ரூ.600 கோடியும் அடங்​கும். இடையூறுகள் தொடர்ந்​தால், நவம்​பர் 8 தீபாவளிக்​குள் இழப்பு ரூ.10,000 கோடியைத் தாண்​டலாம் என்​றும் அவர் கவலை தெரி​வித்​தார்.

ராம்​லீலா, புராரி, சிபிடி மைதானங்​கள் போராட்ட இடங்​களாக அறி​விக்​கப்​பட்​டுள்​ளன. டெல்லி வியாபாரி​கள் மகாசங்​கம், துணைநிலை ஆளுநர், காவல் ஆணை​யர், மாநக​ராட்சி ஆணை​யருக்கு ஒரு கடிதம் எழுதி​யுள்​ளது.

அதில், ராம்​லீலா மைதானத்​தில் நவம்​பர் 1-ல் நடை​பெற உள்ள இண்​டியா கூட்​டணி நிகழ்ச்​சியை ரத்து செய்ய வேண்​டும் என கோரிக்கை வைக்​கப்​பட்​டுள்​ளது.

ராம்​லீலா மைதானம், சதர் பஜார், சாந்​தினி சவுக், காரி பாவ்லி, சாவ்ரி பஜார் போன்ற மொத்த வியாபாரச் சந்​தைகளுக்கு அரு​கில் இருப்​பதே பிரச்​சினை என்று வர்த்​தகர்​கள் கூறுகின்​றனர். தீபாவளிக்கு முந்​தைய வாரங்​கள் விற்​பனைக்​கும் சரக்கு விநியோகத்​துக்​கும் மிக முக்​கிய​மானவை.

சமீபத்​திய போராட்​டங்​களால் மொத்த வியாபாரம் 30% பாதிக்​கப்​பட்​ட​தாக மகாசங்​கம் தெரி​வித்​தது. மேலும் கூட்​டம் நடந்​தால் சரக்கு விநியோகம் தாமத​மாகும், ஆர்​டர்​கள் ரத்​தாகும் என்​றும் மருத்​து​வ​மனைகள், ரயில் நிலை​யத்​துக்​குச் செல்​லும் வழிகள் பாதிக்​கப்​படலாம் என்​றும் கூறியுள்​ளது.

மாணவர்களின் தொடர் போராட்டங்களால் ரூ.10,000 கோடி இழப்பு ஏற்படும் என டெல்லி வர்த்தகர்கள் கவலை
சென்னையில் கொட்டித்தீர்த்த அதிகனமழை: வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in