தொழுகைக்கு மதிப்பளிக்கும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை தாமதப்படுத்தினோம்: ராணுவ தளபதி தகவல்

தொழுகைக்கு மதிப்பளிக்கும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை தாமதப்படுத்தினோம்: ராணுவ தளபதி தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: ரிஷப் ஷா தொகுத்து வழங்​கிய பாட்​காஸ்ட் நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்​திர திவேதி கூறியிருப்ப​தாவது: ‘ஆபரேஷன் சிந்​தூர்' தாக்​குதலின்​போது, பாகிஸ்​தான் தீவிர​வாத முகாமில் இருந்​தவர்​கள் தொழுகை செய்து கொண்​டிருந்​த​தால், அந்த நேரத்​தில் தாக்​குதல் நடத்​தாமல் நமது ராணுவம் தாமதப்​படுத்​தி​யது. 'கட​வுள் ஒரு​வரே' என்ற அடிப்​படை​யில், வழி​பாட்டு நேரத்​தில் இடையூறு செய்​யக்​கூ​டாது என்​ப​தில் ராணுவம் உறு​தி​யாக இருந்​தது.

ராணுவத்​தில் பெண்​களை சேர்ப்​பது மற்​றும் பணி​யிடத்​தில் பாலின சமத்​து​வத்​தைக் கொண்டு வரு​வது போன்ற விஷ​யங்​களில், எனது மகள்​கள் சிறந்த ஆலோ​சனை​களை வழங்​கினர். அதி​காரத் தோரணை​யில் இல்​லாமல், மற்​றவர்​களு​டன் இறங்கி வந்து பழக வேண்​டும் என்​பதை அவர்​கள் மூலம் கற்​றுக்​கொண்​டேன்.

நான் எப்​போதும் வகுப்​பில் முதலிடத்​தில் இருந்​த​தில்​லை. ஆனால் பாடங்​களைப் புரிந்​து​கொள்​வ​தி​லும் வகுப்​பறைக்கு அப்​பாற்​பட்ட வாழ்க்​கைக்​குத் தயா​ராவ​தி​லும் கவனம் செலுத்​தினேன்.

தீவிர​வாத எதிர்ப்பு முயற்​சிகளில் உள்ள தார்​மீகச் சிக்​கல்​களைக் கையாளுவதற்கு அடிக்​கடி பகவத் கீதை மற்​றும் பிற மத நூல்​களைக் மேற்​கோள் காட்​டு​வேன். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

தொழுகைக்கு மதிப்பளிக்கும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை தாமதப்படுத்தினோம்: ராணுவ தளபதி தகவல்
சூர்யா முதல் சிம்பு வரை - விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய திரையுலக பிரபலங்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in