மாமியார் இம்சை தாங்க முடியல கடவுளே... ரூ.20 நோட்டில் எழுதி வேண்டிய மருமகள்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

அனந்தபூர்: கோ​யிலுக்​குச் செல்​பவர்​கள் நல்ல கல்வி வேண்​டும், வேலை வேண்​டும், நல்ல இடத்​தில் திரு​மணம் நடக்க வேண்​டும், குழந்தை பாக்​கி​யம் வேண்​டும், பணக்​காரர் ஆக வேண்​டும் என்று பலவித​மாக கடவுளிடம் வேண்​டிக் கொள்​வது வழக்​கம்.

ஆனால், ஆந்​தி​ர மாநிலம் அனந்​த​பூர் பகு​தி​யைச் சேர்ந்த பெண் ஒரு​வர் வித்​தி​யாச​மான முறை​யில் கடவுளிடம் வேண்​டிக் கொண்​டுள்​ளார். இங்​குள்ள ஒரு முரு​கன் கோயி​லில் சமீபத்​தில் உண்​டியல் காணிக்கை பணம் எண்​ணப்​பட்​டது.

அப்​போது ஒரு புறத்​தில் ஏதோ எழுதப்​பட்​டிருந்த ரூ.20 நோட்டு அவர்​கள் கையில் கிடைத்​தது. அதில், ‘‘மாமி​யார் இம்சை தாங்க முடிய​வில்​லை. அவர் விரை​வில் இறக்க வேண்​டும் கடவுளே..’’ என்று எழுதப்​பட்​டிருந்​தது. இதைக் கண்ட கோயில் நிர்​வாகி​கள் சிரித்து மகிழ்ந்​தனர்.

யாரோ ஒரு மரு​மகள் தனது மாமியார் செய்​யும் கொடுமையை நிரந்​தர​மாக ‘தீர்த்​து’ வைக்க சுவாமிக்​குக் காணிக்கை கொடுத்​துள்​ளார் என பேசிக் கொண்​டனர். இந்த விசித்​திர சம்​பவம் குறித்த வீடியோ மற்​றும் புகைப்​படம் தற்​போது சமூக வலை​தளங்​களில்​ வைரல்​ ஆகி வருகிறது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
மேகேதாட்டு திட்டத்தால் தமிழகத்துக்கே நன்மை: கர்நாடக நீர்​வளத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in