ரூ.2.12 லட்சம் கோடியில் ராணுவத் தளவாடங்கள்: கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல்

ரூ.2.12 லட்சம் கோடியில் ராணுவத் தளவாடங்கள்: கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல்
Updated on: 
1 min read

புதுடெல்லி: இந்​திய ராணுவப் படைகளுக்​காக ரூ.2.12 லட்​சம் கோடி மதிப்​பில் இல​குரக பல்​நோக்கு ஹெலிகாப்​டர்​கள், நீண்ட தூர காமிகேஸ் ட்​ரோன் அமைப்​பு​கள் உள்​ளிட்ட ராணுவத் தளவாடங்​கள் மற்​றும் ஆயுதங்​களைக் கொள்​முதல் செய்ய பாது​காப்​புக் கொள்​முதல் கவுன்​சில் ஒப்​புதல் அளித்​துள்​ளது.

மத்​திய பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் தலை​மையில், பாது​காப்​புக் கொள்​முதல் கவுன்​சில் (டிஏசி) கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​தில், மொத்​தம் ரூ.2.12 லட்​சம் கோடி மதிப்​பிலான தளவாடங்​கள் கொள்​முதல் செய்ய ஒப்​புதல் வழங்​கப்​பட்​டுள்​ளது.

இதன்​படி, இந்​திய ராணுவத்​துக்​காக அதிக சுமை மற்​றும் கடினமான நிலப்​பரப்​பு​களில் இயங்​கக்​கூடிய வாக​னங்​கள், சுய​மாக இயங்​கும் டிராக் வகை பீரங்கி அமைப்பு, இல​குரக பல்​நோக்கு ஹெலிகாப்​டர்​கள் (எல்​எம்​ஆர்​எச்), மிகக் குறுகிய தூர வான் பாது​காப்பு அமைப்பு, ஆளில்லா வான்​வழி வாக​னங்​களை எதிர்​கொள்​ளும் அமைப்பு (சி-யுஏஎஸ்), பிற ஆளில்லா வான்​வழி அமைப்​பு​கள், கண்​காணிப்பு ட்​ரோன்​கள், ஒருங்​கிணைந்த கண்​காணிப்பு மற்​றும் தாக்​குதல் அமைப்பு, நீண்ட தூர காமிகேஸ் ட்​ரோன் அமைப்பு, பரு​வநிலையை கண்​டறிய உதவும் ரேடார்​கள் ஆகிய​வற்​றைக் கொள்​முதல் செய்ய ஒப்​புதல் வழங்​கப்​பட்​டுள்​ளது.

காமிகேஸ் ட்​ரோன்​கள் என்​பது இலக்கை நோக்​கிப் பறந்து, அதன் மீது மோதி வெடிக்​கும் வகை​யில் வடிவ​மைக்​கப்​பட்ட ஆளில்லா வான்​வழி ஆயுதங்​களாகும்.

கடற்​படைக்​கும் தளவாடங்​கள் இந்​தி​யக் கடற்​படைக்​காக, கப்​பல்​களி​லிருந்து வெளியேற்​றப்​படும் எதிரி ஏவு​கணைகளைத் திசைத் திருப்​பும் செயலில் இயங்​கும் அமைப்பு (ஆக்​டிவ் ஆஃப்​போர்டு டிகாய் சிஸ்​டம்) உள்​ளிட்ட முக்​கிய கடற்​படைத் தளவாடங்​களைக் கொள்​முதல் செய்ய ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​திய விமானப் படைக்​காக ஹெலிகாப்​டர்​கள், வான் பாது​காப்பு அமைப்​பு​கள் மற்​றும் மொபைல் எக்ஸ்-பேண்ட் பரு​வநிலை ரேடார்​கள், வான்​வழி​யாக பொருட்​களை கொண்டு செல்ல உதவும் வகை​யில் சிறப்பு பயன்​பாடு ஹெலிகாப்​டர்​கள் உள்​ளிட்​டவை கொள்​முதல் செய்​ய​வும் பாது​காப்​புக் கொள்​முதல் கவுன்​சில் ஒப்​புதல் அளித்​துள்​ளது.

இந்​தக் கொள்​முதல் திட்​டங்​களுக்​கான ஒப்​புதல்​களில், சுமார் 82 சதவீதத் தளவாடங்​கள் இந்​திய உள்​நாட்டு நிறு​வனங்​களிட​மிருந்து கொள்​முதல் செய்​யப்​படும் என்று பாது​காப்பு அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது.

ரூ.2.12 லட்சம் கோடியில் ராணுவத் தளவாடங்கள்: கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல்
ஆந்திராவில் தீவிரமடையும் ‘அர்னாப்’ புயல்: விசாகப்பட்டினத்தில் நாளை கரையை கடக்கிறது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in