ஆந்திராவில் தீவிரமடையும் ‘அர்னாப்’ புயல்: விசாகப்பட்டினத்தில் நாளை கரையை கடக்கிறது

தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை
வங்கக் கடலில் உருவாகியுள்ள அர்னாப் புயல், ஆந்திர மாநிலம் பாபட்லா-விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் ஜலரிபேட்டை மீனவ கிராமத்தில் நேற்று தங்களது படகுகளை பத்திரப்படுத்தும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர். படம்: கே.ஆர்.தீபக்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள அர்னாப் புயல், ஆந்திர மாநிலம் பாபட்லா-விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் ஜலரிபேட்டை மீனவ கிராமத்தில் நேற்று தங்களது படகுகளை பத்திரப்படுத்தும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர். படம்: கே.ஆர்.தீபக்.

Updated on: 
1 min read

அமராவதி: மத்​திய கிழக்கு மற்​றும் அதை​யொட்​டிய தென்​கிழக்கு வங்​கக் கடல் பகுதி​களில் நில​விய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி வலுப்​பெற்று, நேற்று அதி​காலை மத்​திய கிழக்கு மற்​றும் அதை​யொட்​டிய மத்​திய மேற்கு வங்​கக் கடல் பகுதி​களில் புய​லாக உரு​வானது. இதற்கு ‘அர்​னாப்’ புயல் என பெயரிடப்​பட்​டுள்​ளது.

வங்​கக் கடலில் உரு​வாகி​யுள்ள இந்த ‘அர்​னாப்’ புயல் தீவிரமடைந்து ஆந்​திர மாநிலக் கடலோரப் பகுதி​களை நோக்கி நகர்ந்து வரு​கிறது. விசாகப்பட்டினத்திலிருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 610 கி.மீ. தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து சுமார் 690 கி.மீ. தொலைவிலும் இருந்தது. இந்​தப் புயல் நாளை (28-ம் தேதி) காலை பாபட்லா – விசாகப்​பட்​டினம் இடையே, யானம் அருகே கரையைக் கடக்க வாய்ப்​புள்​ள​தாக இந்​திய வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

புயல் கரையைக் கடக்​கும்​போது மணிக்கு 115 முதல் 125 கி.மீ. வேகத்​தில் பலத்த காற்று வீசக்​கூடும். அதி​கபட்​ச​மாக மணிக்கு 144 கி.மீ. வேகத்​தில் காற்று வீச வாய்ப்​புள்​ள​தாக எச்​சரிக்​கப்​பட்​டுள்​ளது.

‘ரெட் அலர்ட்’ - புயல் எச்​சரிக்​கையைத் தொடர்ந்து ஆந்​திரம் மற்​றும் தெற்கு ஒடிசாவின் கடலோரப் பகுதி​களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்​கப்​பட்​டுள்​ளது.

மேலும் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு உரிய மீட்பு பணிகளை மேற்கொள்ள அதி​காரி​களுக்கு உத்​தர​விட்​டார். புயல் காரண​மாக காக்​கிநாடா, கோனசீமா, ஏலூரு, கிழக்கு மற்​றும் மேற்கு கோதாவரி மாவட்​டங்​களில் பலத்த காற்று வீசி​யதுடன், பல பகுதி​களில் கனமழையும் பெய்​தது. இதையடுத்து பேருந்​துப் போக்​கு​வரத்து நிறுத்​தப்​பட்​டதுடன், மின் இணைப்​பு​களும் துண்​டிக்​கப்​பட்​டன.

இத​னால் இணை​யச் சேவையும் பெரிதும் பாதிக்​கப்​பட்​டது. ஆந்திராவுக்கு 7 தேசி​யப் பேரிடர் மீட்​புக் குழுக்​களும், 8 மாநிலப் பேரிடர் மீட்​புக் குழுக்​களும் அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளன.

அர்​னாப் புயல் ஆந்​திராவை நோக்கி நகர்ந்து கரையை கடக்க உள்ள நிலை​யில் தமிழகத்​துக்​கான பாதிப்பு நீங்கி உள்​ளது. ஏற்கெனவே இந்த புயலால் தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இதற்கிடையே வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்​களாக தமிழகத்​தின் பல்​வேறு மாவட்​டங்​களில் கன மழை பெய்தது. ஊட்டி, கொடைக்​கானலில் நிலச்​சரிவு​களும் ஏற்​பட்​டிருந்​தன. இன்று முதல் வரும் 1-ம் தேதி வரை தமிழகத்​தில் மிதமான மழை பொழிவு இருக்கும் என வானிலை மையம் தெரி​வித்​துள்​ளது.

<div class="paragraphs"><p>வங்கக் கடலில் உருவாகியுள்ள அர்னாப் புயல், ஆந்திர மாநிலம் பாபட்லா-விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் ஜலரிபேட்டை மீனவ கிராமத்தில் நேற்று தங்களது படகுகளை பத்திரப்படுத்தும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர். படம்: கே.ஆர்.தீபக்.</p></div>
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது: முன்ஜாமீன் மனு தள்ளுபடியால் சிக்கல் - முழு விவரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in