ரூ.1,000 கோடி சைபர் மோசடி: 4 சீனர்கள் உட்பட 17 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை

ரூ.1,000 கோடி சைபர் மோசடி: 4 சீனர்கள் உட்பட 17 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை
Updated on
1 min read

புதுடெல்லி: சு​மார் ரூ.1,000 கோடி சைபர் மோசடி தொடர்​பாக 4 சீனர்​கள் உள்​ளிட்ட 17 பேர் மற்​றும் 58 நிறு​வனங்​களுக்கு எதி​ராக சிபிஐ குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​துள்​ளது.

உள்​துறை அமைச்​சகத்​தின் கீழ் செயல்​படும் இந்​திய சைபர் குற்ற ஒருங்​கிணைப்பு மையத்​திடம் இருந்து பெறப்​பட்ட தகவலின் அடிப்​படை​யில் இந்த வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது. அந்த மையம், இணை​ய​வழி முதலீடு மற்​றும் வேலை​ வாய்ப்பு மோசடிகள் அதிகரித்​துள்​ள​தாக எச்​சரிக்கை செய்​திருந்​தது.

சிபிஐ விசா​ரணை​யில், நூற்​றுக்​கணக்​கான வங்​கிக் கணக்​கு​கள் மூலம் ரூ.1,000 கோடிக்​கும் அதி​க​மான தொகை பரி​மாற்​றம் செய்​யப்​பட்​டதும், ஒரு குறிப்​பிட்ட கணக்​கிற்கு ரூ.152 கோடிக்கு மேல் பணம் சென்​றதும் தெரிய​வந்​தது.

கர்​நாட​கா, தமிழ்​நாடு, கேரளா, ஆந்​தி​ரா, ஜார்க்​கண்ட் மற்​றும் ஹரி​யா​னா​வில் மொத்​தம் 27 இடங்​களில் சிபிஐ சோதனை நடத்தி ஆவணங்​களை கைப்​பற்​றியது.

போலி நிறு​வனங்​கள் மூலம் வெளி​நாடு​களில் இருந்​து​கொண்டு சிலர் இந்த மோசடிகளை அரங்​கேற்றி வரு​வது தெரிய​வந்​தது.

இந்​நிலை​யில் இந்த வழக்​கில் 4 சீனர்​கள் உள்​ளிட்ட 17 பேர் மற்​றும் 58 நிறு​வனங்​களுக்கு எதி​ராக சிபிஐ குற்​றப்​ பத்​திரிகை தாக்கல் செய்​துள்​ளது. இந்த வழக்​கில் முக்​கிய குற்​ற​வாளி​கள் 3 பேரை சிபிஐ கடந்த அக்​டோபரில் கைது செய்​தது.

ரூ.1,000 கோடி சைபர் மோசடி: 4 சீனர்கள் உட்பட 17 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை
யார் இந்த ‘ரெய்டு’ ஸ்ரீலேகா? - திருவனந்தபுரம் மேயர் ரேஸில் முந்துபவரின் பின்புலம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in