1,500 பேர் வசிக்கும் கிராமத்தில் 3 மாதத்தில் 27,000 குழந்தை பிறந்ததாக சைபர் மோசடி

1,500 பேர் வசிக்கும் கிராமத்தில் 3 மாதத்தில் 27,000 குழந்தை பிறந்ததாக சைபர் மோசடி
Updated on
1 min read

நாக்பூர்: ம​கா​ராஷ்டிரா மாநிலத்​தில் 1,500 பேர் வசிக்​கும் செந்​தூர்​சானி கிராமத்​தில் 3 மாதத்​தில் 27,398 குழந்தை பிறந்​த​தாக பதிவு செய்யப்​பட்​டுள்​ளது. இதில் சைபர் மோசடி நடை​பெற்​றுள்​ளது என தொழில்​நுட்ப குழு விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.

மகா​ராஷ்டிரா மாநிலம் யவாத்​மால் மாவட்​டத்​தில் உள்​ளது செந்​நூர்​சானி கிராமம். இதன் மக்​கள் தொகை 1,500. இந்த கிராம பஞ்​சா​யத்து மூலம் 3 மாதத்​தில் 27,398 பேருக்கு பிறப்பு சான்​றிதழ் கேட்டு தாமத​மாக விண்​ணப்​பம் செய்​யப்​பட்​டுள்​ளது. இது சுகா​தா​ரத்​துறை மற்​றும் பதிவுத்​துறை அதி​காரி​களுக்கு சந்​தேகத்தை ஏற்​படுத்​தி​ய​தால் விஜிலென்ஸ் விசா​ரணைக்கு உத்​தர​விடப்​பட்​டது. சட்​ட​விரோத​மான மற்​றும் தாமத பிறப்பு மற்​றும் இறப்பு பதிவு​களை ரத்து செய்​ய​வும் மகா​ராஷ்டிர அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

இதையடுத்து கடந்த செப்​டம்​பர் மற்​றும் நவம்​பர் மாத பதிவு செய்​யப்​பட்ட ஆவணங்​களை ஆய்வு செய்​யும் பணி தொடங்​கியது. விசா​ரணை குழு அதி​காரி​கள் நடத்​திய விசா​ரணை​யில் 27,398 பிறப்பு சான்​றிதழ் ஆவணங்​களில் 27,397 ஆவணங்​கள் செந்​தூர்​சானி பஞ்​சா​யத்தை சேர்ந்​தது அல்ல எனவும், அவை​கள் சந்​தேகத்​திற்​குரிய​தாக உள்ளன எனவும் தெரிய​வந்​தது.

மாநில அளவில் ஆன்​லைன் உள்​நுழைவு (லாகின்) பரிசோதனை மேற்​கொண்​ட​தில் செந்​தூர்​சானி கிராம பஞ்​சா​யத்​தின் பதிவு ஐடி(சிஆர்​எஸ்) மும்​பை​யுடன் இணைக்​கப்​பட்​டுள்​ளது தெரிந்​தது. இதனால் இந்த விவ​காரம் தொழில்​நுட்ப ஆய்​வுக்​காக புனே​வில் உள்ள சுகா​தார சேவை துணை இயக்​குனருக்​கும், டெல்​லி​யில் உள்ள தேசிய தகவல் மையத்​துக்​கும் அனுப்​பப்​பட்​டது. சைபர் மோசடி மூலம் பிறப்பு சான்​றிதழ் ஆவணத்​துக்கு விண்​ணப்​பிக்​கப்​பட்​டுள்​ளது தொழில்​நுட்ப குழு​வினர் நடத்​திய ஆய்வு மூலம் தெரிய​வந்​தது. எனவே இது தொடர்​பாக யவாத்​மால் காவல் நிலை​யத்​தில் புகார் செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த சைபர் மோசடி​யின் பின்​னணி​யில் செயல்​பட்​டது யார் என விசா​ரணை நடை​பெறுகிறது.

இந்​நிலை​யில் சிஆர்​எஸ் ஐடி, கடவுச் சொல் அல்​லது ஓடிபி ஆகிய​வற்றை யாருட​னும் பகிர்ந்து கொள்ள வேண்​டாம் என யவாத்​மால் மாவட்ட பிறப்பு -இறப்பு சான்​றிதழ் பதி​வாளர்​களுக்கு மாவட்ட சுகா​தா​ரத்​துறை அதி​காரி மற்​றும் மாவட்​ட பதி​வாளர்​ ஆகியோர்​ வேண்​டு​கோள்​ விடுத்​துள்​ளனர்​.

1,500 பேர் வசிக்கும் கிராமத்தில் 3 மாதத்தில் 27,000 குழந்தை பிறந்ததாக சைபர் மோசடி
SIR | கோவை மாவட்டத்தில் 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in