மணிப்பூர் துப்பாக்கிச் சூட்டில் சிஆர்பிஎப் வீரர் காயம்

மணிப்பூர் துப்பாக்கிச் சூட்டில் சிஆர்பிஎப் வீரர் காயம்
Updated on
1 min read

இம்பால்: மணிப்பூர் மாநிலம் காங்​போக்பி மாவட்​டம் தபவ் குக்கி கிராமத்​தில் நேற்று அதி​காலை 2.30 மணி​யள​வில் மர்ம நபர்​கள் ஒரு வீட்​டுக்கு தீ வைத்​த​தாக கூறப்​படு​கிது. இதைத் தொடர்ந்​து, அரு​கில் உள்ள சேனாபதி மாவட்​டத்​தில் உள்ள நாகா தபவ் பகுதியில் அதி​காலை 4 மணி​யள​வில் பல வீடு​கள் தீயிட்டு கொளுத்​தப்​பட்​டன.

இதையடுத்​து, சிஆர்பிஎப் வீரர்​கள் உள்​ளிட்ட பாது​காப்​புப் படையினர் சம்பவ இடங்​களுக்கு விரைந்து சென்று மோதலை கட்டுப்படுத்த முயன்​றனர். எனினும் காலை 9.20 மணி​யள​வில் தபவ் நாகா பகு​தி​யில் மோதல் தீவிரமடைந்​தது. குறிப்​பாக இருகுழுக்​களைச் சேர்ந்​தவர்​கள் பரஸ்​பரம் துப்​பாக்​கி​யால் சுட்டுள்​ளனர். இந்த துப்​பாக்​கிச் சூட்​டில் 54 வயதுடைய சிஆர்பிஎப் வீரர் ஒரு​வர் காயமடைந்​தார். அவர் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மணிப்பூர் துப்பாக்கிச் சூட்டில் சிஆர்பிஎப் வீரர் காயம்
எகிறும் சர்க்கரை விலை: எத்தனால் பெட்ரோல் தான் காரணமா? - சர்ச்சையும் பின்னணியும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in