பஞ்சாப் பயிர்க் கழிவு எரிப்பு சம்பவங்கள் 4,657 ஆக அதிகரிப்பு

பஞ்சாப் பயிர்க் கழிவு எரிப்பு சம்பவங்கள் 4,657 ஆக அதிகரிப்பு
Updated on: 
1 min read

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் புதிதாக 198 இடங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், நடப்பு கண்காணிப்பு காலத்தில் பதிவான பயிர்க்கழிவு எரிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை 4,657 ஆக அதிகரித்துள்ளது.

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதால், டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (என்சிஆர்) காற்று மாசு அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. நேற்றுமுன்தினம் ஒரே நாளில் புதிதாக 198 இடங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், நடப்பு கண்காணிப்புக் காலத்தில் பதிவான பயிர்க்கழிவு எரிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை 4,657 ஆக அதிகரித்துள்ளது.

புள்ளிவிவரங்களின்படி, தர்ன் தரன் மாவட்டத்தில் அதிகபட்சமாக 659, ஃபெரோஸ்பூரில் 621, சங்ரூரில் 508 இடங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, 1,442 வழக்குகளில் சுற்றுச்சூழல் இழப்பீடாக மொத்தம் ரூ.72.85 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில், இதுவரை ரூ.33.60 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயிர்க்கழிவுகளை எரித்த விவசாயிகளின் நில ஆவணங்களில் அதிகாரிகள் 1,150 சிவப்புக் குறிப்புகளைப் பதிவு செய்துள்ளனர். இதில் தர்ன் தரன் மாவட்டத்தில் 310, ஃபெரோஸ்பூரில் 192 பதிவுகள் இடம்பெற்றுள்ளன. இத்தகைய சிவப்புக் குறிப்பு இடம்பெற்றால், சம்பந்தப்பட்ட விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தை அடமானம் வைத்து வங்கிக் கடன் பெறுவதிலும், நிலத்தை விற்பனை செய்வதிலும் சிக்கல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் பயிர்க் கழிவு எரிப்பு சம்பவங்கள் 4,657 ஆக அதிகரிப்பு
காங்கிரஸ் கட்சியின் 2-வது பாரத் மாநாடு: நாளை முதல் 14-ம் தேதி வரை ஹைதராபாத்தில் நடைபெறுகிறது

X