காங்கிரஸ் கட்சியின் 2-வது பாரத் மாநாடு: நாளை முதல் 14-ம் தேதி வரை ஹைதராபாத்தில் நடைபெறுகிறது

காங்கிரஸ் கட்சியின் 2-வது பாரத் மாநாடு: நாளை முதல் 14-ம் தேதி வரை ஹைதராபாத்தில் நடைபெறுகிறது
Updated on: 
1 min read

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நாளை (12-ம் தேதி) முதல் வரும் 14- ம் தேதி வரை அகில இந்​திய காங்கிரஸ் கட்சி சார்​பில் 2-வது பாரத் மாநாடு நடை​பெறுகிறது. இதில், 70 நாடு​களைச் சேர்ந்த 1,000-க்​கும் மேற்​பட்ட பிர​தி​நி​தி​கள் பங்​கேற்​கின்​றனர்.

காங்​கிரஸ் கட்சி சார்​பில், தெலங்​கானா மாநில அரசு நடத்​தும் இந்த பாரத் மாநாட்​டில், உலக அரசி​யல் மற்​றும் பொருளா​தார முன்​னேற்​றங்​கள், உலகின் தெற்கு மற்​றும் வடக்கு நாடு​களுக்கு இடையே​யான ஒத்​துழைப்பு உள்​ளிட்ட முக்​கிய ஆம்​சங்​கள் குறித்து விவா​திக்​கப்பட உள்​ளன.

இதுதொடர்​பாக, சம்​ருத்த பாரத் அறக்​கட்​டளை​யின் அறங்​காவலர் குர்​தீப் சப்​பால் கூறும்​போது, “உல​கம் முழு​வது​முள்ள முற்போக்கு சிந்​தனை கொண்ட அரசி​யல் கட்​சிகள் ஒன்றிணைந்து தங்​களது அனுபவங்​களை பகிர்ந்து கொள்​ள​வும், அரசி​யல் என்​பது அரசி​யல்​வா​தி​களின் நலனுக்​காக அல்​லாமல், மக்​களின் சேவை​களுக்​காக இருக்க வேண்​டுமென்​ப​தற்​கான உத்தி​களை உரு​வாக்​க​வும் இந்த பாரத் மாநாடு ஒரு சிறந்த தளமாக அமை​யும்” என்​றார்.

காங்​கிரஸ் மூத்த தலை​வர் சல்​மான் குர்​ஷித் கூறும்​போது, “இந்தியா, உலகம் மீது ராகுல் காந்தி கொண்​டுள்ள எதிர்​கால கண்​ணோட்​டம், உலகள​வில் உரு​வாகி வரும் புதிய பல பரிமாணங்​களை இந்​தியா எவ்​வாறு எதிர்​கொள்ள வேண்​டும் என்பது பற்றி இந்த மாநாட்​டில் விவா​திக்​கப்​படும். இதில், 12 சர்வதேச அம்​சங்​களும், தெலங்​கானா தொடர்​பான 8 அம்சங்களும் விவா​திக்​கப்​படும்” என்​றார்.

காங்​கிரஸ் தலை​வர் தர்​பாபு கூறும்​போது, “சர்​வ​தேச நிகழ்ச்சிகள் 4 முக்​கிய கருப்​பொருட்​களின் அடிப்​படை​யில் நடைபெறும். ஹைத​ரா​பாத்தை தொழில்​நுட்​பம் மற்​றும் தொழில்துறை மைய​மாக​வும், உலகப் பொருளா​தார மையமாகவும் உரு​வாக்க வேண்​டும் என்பது உள்​ளிட்ட சமூகப் பிரச்​சினை​களை அலசுவது போன்ற கருத்து பரி​மாற்​றம் இந்த மாநாட்​டில் நடை​பெறும்” என்​றார்.

காங்கிரஸ் கட்சியின் 2-வது பாரத் மாநாடு: நாளை முதல் 14-ம் தேதி வரை ஹைதராபாத்தில் நடைபெறுகிறது
5 தொகுதி இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்? - கணக்கில் சாத்தியம்... களத்தில் சிக்கல்...

X