

புதுடெல்லி: மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸின் (டிஎம்சி) 20 எம்.பி.க்கள் அந்தக் கட்சியில் இருந்து விலகி, தேசிய குடிமக்கள் கட்சியில் (என்சிபிஐ) இணைந்தனர்.
இதையடுத்து, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி இவர்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் டிஎம்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுதொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, இந்த மனு குறித்து விளக்கம் அளிக்கும்படி 20 எம்.பி.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.