மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல்

மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல்
Updated on
1 min read

புதுடெல்லி: மகாத்மா ஜோதிபா புலே​யின் 200-வது பிறந்த நாள் விழா நேற்று நாடு முழு​வதும் கொண்​டாடப்​பட்​டது. அவருக்கு மரி​யாதை செலுத்​தும் நிகழ்ச்சி நாடாளு​மன்ற வளாகத்​தில் உள்ள பிரேர்னா ஸ்தலில் நடை​பெற்​றது. இதில் பங்​கேற்​கப் பிரதமர் மோடி காரில் வந்து இறங்​கி​னார். அப்​போது மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்​லா, ராகுல் காந்​தி, மத்​திய அமைச்​சர் அர்​ஜுன் ராம் மேக்​வால், மாநிலங்​களவை முன்​னாள் துணைத் தலை​வர் ஹரிவன்ஷ் உள்​ளிட்​டோர் அங்கு இருந்​தனர். அப்​போது பிரதமர் மோடி​யும் ராகுல் காந்​தி​யும் சிறிது நேரம் சுமுக​மாக உரை​யாடிக் கொண்​டிருந்​தனர்.

இரு​வரும் பொது மேடைகளி​லும் அரசி​யல் கூட்​டங்​களி​லும் தொடர்ந்து ஒரு​வரை ஒரு​வர் தாக்​கிப் பேசி வரும் நிலை​யில் இந்த உரை​யால் நிகழ்ந்​தது. நாட்டு நலனுடன் பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்​ட​தாக ராகுல் காந்தி கடந்த காலங்​களில் குற்​றம் சாட்​டி​யுள்​ளார். மத்​திய அரசின் வெளி​யுறவுக் கொள்கை குறித்​தும் அவர் விமர்​சனம் செய்​துள்​ளார்.

இந்த விமர்​சனங்​களுக்​குப் பிரதமர் நரேந்​திர மோடி​யும் கடந்த காலங்​களில் வலு​வான பதிலடி கொடுத்​துள்​ளார். ராகுல் காந்​தியை ராஜகு​மாரன் என்று அவர் மறை​முக​மாக சாடி​யுள்​ளார். இந்​நிலை​யில் இரு​வரும் வெளிப்​படை​யாக பேசிக் கொண்​டது அனை​வரின் கவனத்​தை​யும் ஈர்த்​துள்​ளது.

பிரேர்னா ஸ்தலில் மகாத்மா ஜோதிபா புலேவுக்கு மரி​யாதை செலுத்​தும் நிகழ்ச்​சி​யில் குடியரசுத் தலைவர் திர​வுபதி முர்​மு, குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் உள்​ளிட்ட தலை​வர்​களும் கலந்து கொண்​டனர்.

பிரதமர் மோடி ‘எக்​ஸ்' தளத்​தில் வெளி​யிட்​டுள்ள செய்​தி​யில், சமூக நீதி மற்​றும் கல்விக்​குப் புலே ஆற்​றிய பங்​களிப்பை பாராட்​டியதுடன், அறி​வாற்​றல் மற்​றும் சீர்​திருத்​தத்​தின் மூலம் விளிம்​புநிலை மக்​களுக்கு அதி​காரம் அளித்த ஒரு முன்​னோடி என்று அவரை புகழ்ந்​துள்​ளார்.

ராகுல் காந்தி தனது ‘எக்​ஸ்' பதி​வில், பாகு​பாடு மற்​றும் சமத்​து​வ​மின்​மைக்கு எதி​ராக வாழ்​நாள் முழு​வதும் புலே மேற்​கொண்ட போ​ராட்​டத்தை எடுத்​துரைத்​தார். சமூக நீதியை நோக்​கிய பாதை​யில் அவரது லட்​சி​யங்​கள் தொடர்ந்​து ஊக்​கம்​ அளிப்​ப​தாக உள்​ளது என்று அவர்​ புகழாரம்​ சூட்​டி​னார்​.

மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல்
மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in