மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

புதுடெல்லி: நாடாளு​மன்​றம் மற்​றும் சட்​டப்​பேர​வை​களில் 2029-ம் ஆண்டு முதல் 33% மகளிர் இடஒதுக்​கீட்டை நடை​முறைப்​படுத்​த​வும், மகளிருக்கு 273 இடங்​களை ஒதுக்​கும் வகை​யில் மொத்த மக்​கள​வைத் தொகு​தி​களின் எண்​ணிக்​கையை 816 ஆக உயர்த்​த​வும் வழி​வகுக்​கும் வரைவு மசோ​தாக்​களுக்கு மத்​திய அரசு கடந்த 8-ம் தேதி ஒப்​புதல் வழங்​கியது.

இந்த மசோ​தாவுக்கு ஒப்​புதல் வழங்க ஏப்​.16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை சிறப்பு நாடாளு​மன்​றக் கூட்​டத்தை மத்​திய அரசு கூட்டி​யுள்​ளது.

இந்​நிலை​யில் மேற்கு வங்​கம், தமிழ்​நாடு, அசாம், கேரளா, புதுச்​சேரி ஆகிய​ மாநில சட்டப்பேர​வைத் தேர்​தல்​களில் வெற்றி பெறவே மகளிர் இடஒதுக்​கீடு சட்​டம் மற்​றும் தொகுதி மறு வரையறை தொடர்​பான மசோ​தாக்​களை நிறைவேற்​று​வதற்​காக மத்​திய அரசு நாடாளு​மன்​றத்​தின் சிறப்பு கூட்​டத்​தை கூட்டி உள்​ள​தாக காங்​கிரஸ் குற்​றம்​சாட்டி உள்​ளது.

இதுதொடர்​பாக விவா​திப்​ப​தற்​காக ஏப்​.15-ம் தேதி காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் ஆலோ​சனை நடத்​தவுள்​ளன. டெல்​லி​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற காங்​கிரஸ் செயற்​குழுக் கூட்​டத்​தில் இந்த முடிவு எடுக்​கப்​பட்​டுள்​ளது. இந்த மசோ​தா​வில் திருத்​தம் கொண்டு வரப்பட வேண்​டும் என்று காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் கோரிக்கை விடுத்​துள்​ளன.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in