அமித் ஷா குறித்து சர்ச்சை பேச்சு: அவதூறு வழக்கில் இருந்து ராகுல் காந்தி விடுதலை

சுல்​தான்​பூர் சிறப்பு நீதி​மன்​றம் தீர்ப்பு
அமித் ஷா குறித்து சர்ச்சை பேச்சு: அவதூறு வழக்கில் இருந்து ராகுல் காந்தி விடுதலை
Updated on: 
1 min read

சுல்​தான்​பூர்: மத்​​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவை அவமதிக்​கும் வகை​யில் கருத்து தெரி​வித்​த​தாக தொடுக்​கப்​பட்ட வழக்​கில் இருந்து காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்தியை சுல்​தான்​பூர் சிறப்பு நீதி​மன்​றம் நேற்று விடு​வித்​தது.

உத்தர பிரதேச மாநிலம் சுல்​தான்​பூர் மாவட்​டம், ஹனு​மன்​கஞ்ச் பகு​தி​யைச் சேர்ந்​தவர் விஜய் மிஸ்​ரா. மாவட்ட கூட்​டுறவு வங்கியின் முன்​னாள் தலை​வரும் பாஜக நிர்​வாகி​யு​மான இவர் சுல்​தான்​பூரில் உள்ள எம்​.பி. எம்​எல்​ஏ-க்​களுக்​கான சிறப்பு நீதி​மன்றத்​தில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி ஒரு மனு தாக்​கல் செய்​தார்.

அதில், “2018 கர்​நாடக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி பெங்களூரு​வில் நடை​பெற்ற பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் பங்​கேற்ற ராகுல் காந்​தி, மத்​திய அமைச்​சர் அமித் ஷா குறித்து அவதூறாக பேசி​னார். அவர் மீது அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு பல ஆண்​டு​களாக பல்​வேறு கட்​டங்​களைக் கடந்து சென்​றது. பிப்​ர​வரி 2024-ல் ராகுல் நீதி​மன்​றத்​தில் சரணடைந்​தார், பின்​னர் அவருக்கு ஜாமீன் வழங்​கப்​பட்​டது. ஜூலை 2024-ல் அவரது வாக்​குமூலம் பதிவு செய்​யப்​பட்​டதுடன், விசா​ரணை​யின்​போது புகார்​தா​ரர் மற்​றும் பிற சாட்​சிகளை​யும் நீதி​மன்​றம் விசாரித்​தது. இந்த வழக்​கின் இறுதி வாதங்​கள் அக்​டோபர் 6, 2026 அன்று தொடங்​கி, அக்​டோபர் 12 அன்று நிறைவடைந்​தன. அக்டோபர் 26-ம் தேதி தீர்ப்பு வழங்​கப்​படும் என நீதி​மன்​றம் குறிப்பிட்​டிருந்​தது.

இதன்​படி, ராகுல் நேற்று நீதி​மன்​றத்​தில் நேரில் ஆஜரா​னார். அப்​போது, ராகுல் மீதான குற்​றச்​சாட்​டுக்கு போதிய ஆதா​ரம் சமர்ப்​பிக்​கப்​பட​வில்லை எனக் கூறிய நீதிபதி சுபம் வர்​மா, அவரை இந்த வழக்​கி​லிருந்து விடு​தலை செய்​வ​தாக தீர்ப்பு வழங்​கி​னார். இதையடுத்​து, அங்கு கூடி​யிருந்த ராகுல் காந்​தி​யின் ஆதரவாளர்கள், இந்​தத் தீர்ப்பை வரவேற்​றதுடன், மகிழ்ச்சியையும் நன்​றியை​யும் தெரி​வித்​தனர்.

ஆம்​புலன்ஸ் வாக​னம் மோதல்

முன்​ன​தாக, நீதி​மன்​றத்​தில் ஆஜராவதற்​காக லக்​னோ​விலிருந்து சுல்​தான்​பூருக்கு ராகுல் காரில் சென்று கொண்​டிருந்​தார். பூர்வாஞ்சல் எக்​ஸ்​பிரஸ் சாலை​யில் ராகுல் காருக்கு முன்​னும் பின்னும் பாது​காப்பு வாக​னங்​கள் அணிவகுத்​துச் சென்​றன. அப்போது, பின்​னால் சென்ற ஒரு காரின் மீது ஆம்​புலன்ஸ் வாகனம் மோதி​யது. இதனால் அடுத்​தடுத்து சென்ற பாது​காப்பு வாகனங்கள் சில மோதிக்​கொண்​டன. மொத்​தம் 4 கார்​களும் ஒரு ஆம்​புலன்​ஸும் இந்த விபத்​தில் சிக்​கின.

இந்த விபத்​தில் ராகுல் காந்​தி​யுடன் பயணித்த காங்​கிரஸ் நிர்வாகி​கள், பாது​காப்பு அதி​காரி​கள் சிலர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்​தவர்​கள் அரு​கிலுள்ள மருத்துவமனை​யில் சேர்க்​கப்​பட்​டனர். இந்த விபத்து நேர்ந்​த​போது ராகுல் வாக​னம் வெகு தொலை​வில் சென்று கொண்டிருந்தது. இருப்​பினும் பாது​காப்பு வாக​னங்​கள் மீது ஆம்புலன்ஸ் மோதி​யது பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது. இதனிடையே இந்த விபத்து குறித்து சிறப்பு புல​னாய்​வுக்​குழு (எஸ்ஐடி) விசா​ரிக்க உத்தர பிரதேச மாநில போலீஸ் டிஜிபி உத்தரவிட்​டுள்​ளார்.

அமித் ஷா குறித்து சர்ச்சை பேச்சு: அவதூறு வழக்கில் இருந்து ராகுல் காந்தி விடுதலை
அருணாச்சலில் புதிய அணை கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு: வன்முறையில் முடிந்த போராட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in